பொங்கல் நாளில், சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ரிலீஸ் ஆகுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ஜனவரி 23-ந்தேதி சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் ரிலீசாகலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் ஆரம்பித்தனர். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அய்யனாராக சூர்யா இப்படத்தில் நடிப்பதால், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜனவரியிலும் ‘கருப்பு’ வெளியாகாது என சொல்லப்படுகிறது. இதனிடையில் இந்த படத்துடைய ஓடிடி உரிமையை விற்பதற்காக படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி ஜானரில் ‘கருப்பு’ திரைப்படம் உருவாகியுள்ளது. வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு விதமான ரோல்களில் மிரட்டலான தோற்றத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.
மேலும் திரிஷா, நட்டி நடராஜ், லப்பர் பந்து பிரபலம் ஸ்வாசிகா, யோகிபாபு, அனகா மாயாரவி உள்பட பலரும் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை இயக்கியதுடன் வில்லனாகவும் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ஜனவரியில் ‘கருப்பு’ படம் ரிலீஸாவதற்கு வாய்ப்பில்லை என தெரிந்ததை தொடர்ந்து, கோடைவிடுமுறையில் படம் வெளியிடப்பட்டால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில் சூர்யாவின் அடுத்த படத்துக்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. மலையாள திரையில் ‘ஆவேஷம்’ பட இயக்குநரான ஜீத்து மாதவன் இயக்கத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லின் ஆகியோர் நடிப்பில் ‘ சூர்யா 47 ‘ படம் உருவாகவுள்ளது.

