‘ஜனநாயகன்’ படம் குறித்து, ரசிகர்கள் கேட்கும் தரமான ஒரே கேள்வி..
படத்துல டுவிஸ்ட் இருக்கலாம். பட ரிலீஸ்ல டுவிஸ்ட் கூடாது. இதான்ங்க, விஜய் ஃபேன்ஸ்ஸோட டென்ஷன். விஷயத்திற்கு வருவோம்..
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த ‘கேஜிஎப்’ படத்தை தொடர்ந்து, யாஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘டாக்ஸிக்’
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்கிற கேவிஎன் தயாரிப்பு நிறுவன அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதே தயாரிப்பு நிறுவனம்தான் ‘ஜனநாயகன்’ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதியையும் தெளிவாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதாவது, தங்களை தயார்படுத்தும் மாபெரும் திருவிழாவுக்காக.!
இச்சூழலில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படம் ஆங்கிலத்திலும் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை தற்போது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நீண்ட தாடி, லாங் கோட், பெரிய தொப்பி, வாயில் சுருட்டு என முதல் தோற்றத்திலேயே மிரட்டிய யாஷ், அடுத்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸை மிரட்டப் போகிறார் என அவரது ரசிகர்கள் தற்போது யாஷ் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகும் நிலையில், இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள், டாக்ஸிக் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திடம் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தரமான தெளிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்டு வருகிறார்கள். இதற்கு, தளபதி விஜய் பாணியில் வெயிட்டிங்.. என்ற நிலையே பாலிடிக்ஸ் பதிலாய் தொடர்கிறது..
