கோலிவுட் நயன்தாராவுக்கு, பாலிவுட்டில் இருந்து ஜோதிகா டஃப்..
‘ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது’ என்பதற்கு ஜோதிகாவும் சிறந்த எடுத்துக்காட்டுதான். இளமை இருக்கும்போது கிடைத்த வாய்ப்புபோல, தொடர்ந்து அமையாதுதானே. அதற்காக முதிர்ந்த பருவத்தில் ஏதேதோ பிதற்றுதல் விவாதத்தை தானே வளர்க்கும். சரி, விஷயத்திற்கு வருவோம்..
நடிகை ஜோதிகா மும்பைக்கு போனதற்கு அவரது அம்மாவுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தோடு, மும்பைக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
இது மட்டுமில்லாமல், அவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். குறிப்பாக, ஜோதிகாவுக்கு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் இருக்கிறது.
திருமணத்திற்கு முன்புபோல வந்த வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் வருவதில்லை என்ற ஆதங்கம் எரிச்சலை தருகிறது. அதனால், பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.
அஜய் தேவ்கன், மாதவன் உடன் இணைந்து ‘சைத்தான்’ படம், பின்னர் ‘டப்பா கார்டெல்’ வெப் சீரிஸ் என அடுத்தடுத்து நயன்தாராவை நினைப்பில் வைத்து,
டஃப் கொடுத்தவாறு ஒளிமயமாய் உலா வருகிறார் ஜோதிகா.
முன்னதாக அவர், ‘தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு மதிப்பு இல்லை. அவர்களுக்கு வலுவான கதாபாத்திர வடிவமைப்பு இருந்ததில்லை. கதாநாயகிகள் கதாநாயகனுடன் இணைந்து நடனம் ஆடவும், ரொமான்ஸ் செய்யவும் தான் கதாபாத்திரம் வடிவமைக்கப்படுகிறது.
நானும் அப்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், இது குறித்து தெரிந்து கொண்டு அப்படியான படங்களில் நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன்’ என சிறு கோபத்துடன் உணர்வை வெளிப்படுத்தினார்.
பல வருட எதிர்பார்ப்புக்கு பிறகு, தற்போது பாலிவுட்டில் பிஸியாகி வருவதால், வயதையும் குறைத்துக் காட்டும் வகையில், உடல் எடையை குறைத்துள்ளார். இது தொடர்பாக, அமுரா (Amura) என்ற உடல் எடையைக் குறைக்கும் நிறுவனத்துடன் இணைந்து, கடந்த 3 மாதத்தில் 9 கிலோ எடையைக் குறைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் மலர்ந்துள்ளார்.
மேலும், தன்னுடைய மாஸ்டர் மற்றும் அமுரா என்ற அமைப்பினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதமும் எழுதியுள்ளார். ஜோதிகா தற்போது செம ஸ்லிம்மாக இருக்கிறார். இதற்காக அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுகிறார்.
சூர்யா, தற்போது தனது 45-வது படத்தில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது.
ஆக.. இப்ப, முதல்ல வாசிச்சதை மறுபடியும் வாசிங்க பார்க்கலாம்.!
