இரவு 9 மணிக்கு மேல் தொடரும் எனது நல்ல பழக்கம்: சாய் பல்லவி லைஃப் ஸ்டைல்..

ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பழக்கம் உண்டு. அதில், மலர் டீச்சரின் பழக்கம் பார்ப்போம்..

கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன், மற்றும் இந்த ஆண்டு வெளியான ‘தண்டேல்’ படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

தற்போது பாலிவுட்டில் சாய் பல்லவி ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணம் படத்திலும், அமீர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். சம்பள விஷயத்திலும் தென்னிந்திய நடிகைகளான நயன்தாரா, சமந்தாவை ஓவர் டேக் செய்து ரூ.15 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

ஒரு மருத்துவராக இருந்தும், சினிமாவில் தடம் பதித்து கலக்கி வரும் சாய் பல்லவி, பல சுவாரஸ்யமான தகவல்களை தற்போது பகிர்ந்துள்ளார். அதாவது, தன்னுடைய வாழ்க்கை முறை பற்றி சாய் பல்லவி பேசியபோது, ‘நான் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். நான் ஏன் காலை 4 மணிக்கு எழுந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை,

ஆனால், நான் படிப்பு – வேலை என ஓட ஆரம்பித்தபோது எனக்கு இந்த பழக்கம் தொடங்கியது. நான் ஜார்ஜியாவில் படித்துக் கொண்டிருக்கும் போது, ​​காலை 3.30 மணியளவில் எழுந்து படிக்கும் பழக்கம் இருந்தது. அதனால் இந்த முறை என் உடலுக்குப் பழகிவிட்டது’.

கல்லூரி முடிந்து நான் வீட்டில் ஓய்வில் இருந்தாலும், சீக்கிரம் எழுந்து விடுவேன். நானே தூங்க முயற்சித்தாலும், என்னால் தூங்க முடியாது. அதனால், தினமும் 4 மணிக்கு எழுந்து என்னுடைய தினசரி வேலைகளை செய்ய துவங்கி விடுவேன். அதேபோல், பல திரைப்படங்கள் இரவு முழுவதும் படமாக்கப்படுகின்றன. ஆனால், என்னால் 9 மணிக்கு மேல் கண் விழித்திருக்க முடியாது.

என்னுடைய இந்த பழக்கத்தை பார்த்து, இயக்குனர்கள் ஒரு சிறு பிள்ளையாக நான் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். காரணம், அடம் பிடித்தாவது இரவு 9 மணிக்கு தூங்கி விடுவேன் என்பதால், இது இரவு நேர ஷூட்டிங்கில் எனக்கு பிரச்சினையாக இருந்தாலும், இதை ஒரு நல்ல பழக்கமாகவே நான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

டாக்டர் படிப்பில்லையா, அதனால உடம்பையும் இளமையையும் புரிஞ்சு வெச்சுருக்காங்க.!

actress sai pallavi in daily life style
actress sai pallavi in daily life style