ஏன் இரண்டாவது திருமணம் செய்யவில்லை?: பார்த்திபன் பதில்..

2-வது 3-வது திருமணம் என்பது சாதாரண நிகழ்வாக மாறிய நிலையில், பார்த்திபன் தெரிவித்துள்ள திருமண வாசகம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்துப் பார்ப்போம்..

நடிகர், இயக்குநர், பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.1989 ஆம் ஆண்டு தனது முதல் படமான புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சீதா.

இவர்கள் இருவருக்கும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, 1990-ம் ஆண்டு திருமணம் செய்து 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள். இவர்களுக்கு கீர்த்தனா, ராக்கி மற்றும் அபிநயா என மூன்று குழந்தைகள் உள்ளார்கள்.பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

பின்னர் பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. அதேபோல் சீதாவும் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில், பார்த்திபன் சீதாவுடனான மணமுறிவுக்குப் பின்னர் அவர் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது,

‘சீதாவுக்கு பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை என்பதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரைப் பிரிந்தபின் அவரது தாயார் இறப்பின்போதே அவரை கடைசியாக சந்தித்தேன்.

இந்த வேகமான உலகில் உறவுகள் நிலையற்றதாக இருப்பதால், அதனுடன் பயணிக்காமல் அதற்கு பதிலாக நினைவுகளுடன் பயணிக்கத் தொடங்கி விட்டேன். இதுவும் ஒருவிதமான காதலின் வடிவம்’ என தெரிவித்துள்ளார். பார்த்திபன் இவ்வாறு கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

 

parthiban talks ex wife seetha and his second marriage
parthiban talks ex wife seetha and his second marriage