ஐபிஎல் ஆட்டம் தொடக்கமாக, ஷாருக்கான்-நடிகை திஷா பதானி போட்ட ஆட்டம்.. வைரல்..
ஐபிஎல் கிரிக்கெட்18 வது சீசன் நேற்று 22-ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் ஸ்ரேயா கோஷல் பாடல் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதேபோல், நடிகை திஷா பதானி கிளாமரான ஆட்டமும் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்த சில நிகழ்வுகள் பார்ப்போம்..
* திஷா பதானி தற்போது இந்திய சினிமாவில் செம கிளாமரான காட்சிகளில் அட்டகாசமாக நடிக்கிறார் என்பதால், பலரும் அவரை புக் செய்கிறார்கள். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனக்காக உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில், இவர் ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் நடனமாடுகிறார் என்ற தகவல் வெளியானது, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில், இவரை நேரில் பார்க்க ஈடன் கார்டனுக்குச் சென்ற ரசிகர்களும் இருக்கிறார்கள்.
* கொல்கத்தாவில் தொடங்கியுள்ள ஐபிஎல் போட்டி தொடக்க நிகழ்ச்சியை நடிகரும் கடந்த ஆண்டு கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தொகுத்து வழங்கினார். பின்னர், பாடகர் கரன் அவுஜலா பாடல்கள் பாடி மொத்த கூட்டத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
* ரிங்கு சிங் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடனமாடினர். அவர்கள் நடனமாடியது பார்ப்பதற்கு சிரிப்பூட்டும் வகையில் இருந்ததால், விராட்கோலி உள்ளிட்ட பலரும் சிரித்தார்கள். இவர்கள் இருவரும் நடனமாடியது தொடர்பான வீடியோ தற்போது வேகமாக பரவி தெறிக்கிறது.
* ஷாருக்கான் விராட் கோலியுடனும் இணைந்து நடனம் ஆடினார். இந்நிகழ்ச்சியில் விராட்கோலிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
* காம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஏற்கனவே 2 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அதேபோல், கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்து அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்து விட்டார் என ஷாருக்கான் தெரிவித்தார்.
* தொடக்க ஆட்டத்தில் கல்கத்தாவை வீழ்த்தி, பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
