இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகப் போகும் ஐந்து திரைப்படங்கள்..நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்த்துடன் 5 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.ஏற்கனவே எதிர்பார்ப்புடன் வெளியாகி சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதேபோல் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் துருவ் விக்ரம் நடிப்பிலும் வெளியாக உள்ள திரைப்படம் பைசன் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.
அடுத்தடுத்து வெளியாக போகும் இந்த ஐந்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரிட் திரைப்படம் எது?நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
