நல்லவேளை காலேஜ்க்கு அனுப்பல.. மகள் குறித்து வனிதா விஜயகுமார் பேச்சு.!!
மகள் ஜோவிகா குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவரது மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தாலும் அதன் பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போனார் என்றே சொல்லலாம்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இவரது மகள் ஜோவிகா தயாரித்து உள்ளார்.
தற்போது தனது மகளின் காதல் குறித்து பேசி உள்ளார். அதாவது என் மகள் லவ் பண்ணவே மாட்டா காதல் வலி குறித்து என் வாழ்க்கையின் மூலம் அவள் கற்றுக் கொண்டால் என் மகள் காதல் விஷயத்தில் கவனமாக இருப்பாள் நல்லவேளை என் மகளை காலேஜுக்கு அனுப்பவில்லை என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
