போதை பொருள் விவகாரம்.. ஒரே வார்த்தையில் பதில் சொல்ல அருண் விஜய்..!
போதைப்பொருள் விவகாரம் குறித்து ஒரே வார்த்தையில் பதில் சொல்லியுள்ளார் அருண் விஜய்.

தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
மேலும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு இருந்து வருகிறது இந்த நிலையில் அருண் விஜய் இடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் “நோ கமெண்ட்ஸ்” நான் இங்கே என் பட நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்கிறேன் என்று சொல்லி எதுவும் பேசாமல் சென்று இருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
