The GOAT Review
The GOAT Review

நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ (தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் என்னதான் சொல்ல வருகிறது என்று பார்க்கலாம்..

விஜய் – வெங்கட் பிரபு- யுவன் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. ‘ Goat என்ற, ‘The Greatest of All Time’ படம். முதல் முறையாக தமிழ் சினிமாவில் டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது ரசிக்கத்தக்கது.

விஜய் (காந்தி), பிரஷாந்த், பிரபு தேவா மற்றும் அஜ்மல் ஆகிய நால்வரும் சீக்ரெட் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தலைமை அதிகாரியாக ஜெயராம் இருக்கிறார்.

இவர்கள் இணைந்து செய்த மிஷன் ஒன்றில் மோகன் அவருடைய குடும்பமும் பாதிக்கப்பட்டு, அதில் தனது குடும்பத்தை இழக்கிறார் மோகன். மறுபுறம் தாய்லாந்துக்கு மற்றொரு மிஷன் காரணமாக செல்லும் விஜய் தனது மனைவி மற்றும் மகனையும் அங்கு அழைத்து செல்ல, பிரச்சனை ஏற்படுகிறது.

இதில், விஜய்யின் மகன் ஜீவன் இறந்து விடுகிறான். இதன்பின் சீக்ரெட் வேலையை விட்டு வெளியேறும் விஜய்க்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடக்கிறது.

இதன்பின், மீண்டும் இணையும் விஜய்க்கு என்னென்ன பிரச்சனை எல்லாம் வந்தது? இதனை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

தளபதி விஜய் வழக்கம்போல தெறிக்க விட்டுள்ளார். தந்தை கதாபாத்திரத்திலும் மகன் கதாபாத்திரத்திலும் வேற லெவல். குறிப்பாக, மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் கலாட்டா அதகளம் தான். ஆக்சன் எமோஷனல், நகைச்சுவை என தனக்கென உரித்தான நடிப்பில் மிரட்டியுள்ளார்.

பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

அஜ்மல், லைலா, வைபவ், ஜெயராம், பிரேம்ஜிக்கு குறைந்த காட்சிகள் என்றாலும் பக்காவாக இருந்தது. குறை என்று எதுவும் இல்லை. மீனாட்சி சவுத்ரி பெரிதும் கவரவில்லை.

வழக்கமான ரிவெஞ் ஸ்டோரி என்றாலும் தனது திரைக்கதை மற்றும் High Moments-ஐ வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார்.

சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரின் கேமியோ கைதட்டல்களை அள்ளுகிறது.

குறிப்பாக, கேப்டன் விஜயகாந்தின் இன்ட்ரோ திரையரங்கையே தெறிக்க விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அது வேற லெவல். டீ ஏஜிங் மற்றும் தொழில்நுட்பங்கள் சில இடங்களில் பிசிறு தட்டுகிறது.

ஆனால், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இவ்வளவு மிகப்பெரிய விஷயம் செய்ததே பெரும் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துகள்.

முதல் பாதி, சற்று தொய்வாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுவென செல்கிறது.

குறிப்பாக, கடைசி நிமிடங்கள் திரையரங்கை தெறிக்க விட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு .

அதில், ஸ்பார்க் பாடலை தவிர்த்து இருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா, பின்னணி இசை மிக அருமை. ஒளிப்பதிவு, எடிட்டிங் மிக சிறப்பு.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில், கல்பாத்தி எஸ்.அகோரம் கல்பாத்தி எஸ். கணேஷ் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25 வது திரைப்படம் கோட்.

மொத்தத்தில் ‘தி கோட்’ (தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்) குடும்பங்கள் கொண்டாடும் படம்.

RATING – 3.5/5

YouTube video