பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் புதிய போமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் முக்கியமான ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. எதுவரை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சிறிது ஓய்வு எடுக்கப் போவதாக சொல்லி இருந்த நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அந்த நேரம் விஜய் டிவி தொகுப்பாளரை ப்ரோமோவுடன் அறிமுகப்படுத்தியது. அது வேறு யாரும் கிடையாது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான்.
விஜய் சேதுபதி நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்று ஆர்வத்தோடு பிக் பாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. புது முயற்சியாக ரசிகர்கள் இந்த ப்ரோமோவை வெளியிடுவது போல இருப்பது முக்கியமான ஒன்று.
இன்று வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பொதுமக்கள் ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை விஜய் சேதுபதியிடம் சொல்வது போல வெளியாகி உள்ளது.
பஸ்ஸில் பொதுமக்களுடன் விஜய் சேதுபதி உட்கார்ந்திருக்க ஒரு பெண்ணை உட்கார வைத்து இவர் எழுந்து நிற்கிறார். அங்கு இருப்பவர்கள் ப்ரோ எலகன மனசு 12B ஓகே, ஆனா BBல வேணாம். பஜ்ஜி கடையில் உட்கார்ந்து பஜ்ஜி சாப்பிடும் விஜய் சேதுபதியிடம் ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசுவாங்க வாழைக்காய் பஜ்ஜி மாதிரி வளவளன்னு இல்லாம மிளகாய் பஜ்ஜி மாதிரி சுருக்குன்னு கேட்கணும் என்று சொல்லுகிறார். மேக்கப் மேன் பக்கத்தில் பம்மி கொண்டு இருக்க என்னடா உனக்கு கருத்து சொல்லனுமா என்று கேட்கிறார் விஜய் சேதுபதி. அதே தான் சார் weekend la தான் சார் நல்லவங்க மாதிரி பம்முவாங்க,week days la எகுறுவாங்க உஷாரா இருங்க சார்,, சரிங்க சார் என்று சொல்லுகிறார் விஜய் சேதுபதி.
இதனால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.