முட்டியில் நடந்த ஆபரேஷன் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் டிடி.
தொகுப்பாளினியாக தன் பணியை தொடங்கிய டிடி தமிழ் சினிமாவில் விசில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பவர் பாண்டி ,காபி வித் காதல் போன்ற சில படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் சமீபத்தில் அவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடிவதில்லை அதற்கு காரணம் அவர் முட்டியில் ஏற்பட்ட அறுவை சிகிச்சை தான். அதனைக் குறித்து உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில், இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ஆனால் இது நாலாவது அறுவை சிகிச்சை. இதுதான் கடைசியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.இது மட்டும் இல்லாமல் மிகுந்த வலியும் இருந்தது. கடினமாக உழைத்தேன் ஆனால் அத்துடன் முன்னேற்றம் கொஞ்சம் இருந்தது இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உங்களின் அன்பும் ஆதரவும் தான் என்னை மீட்டது.
மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த டிடி,வலுவடைந்து வருகிறேன். விரைவில் சந்திப்பேன்.புதிய முட்டியுடன் புதிய நான்.அன்புடன் டிடி என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைவீர்கள் என்று அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்