முத்து, மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட மனோஜ் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துவின் நண்பர் குடித்துவிட்டு அம்மா அப்பாவின் 60 வது கல்யாணம் பண்ண காசு இல்லாத விஷயத்தை சொல்லி வருத்தப்படுகிறார். நீ கவலைப்படாத நான் பணத்தை ரெடி பண்றேன் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார் முத்து. மனோஜ் கடைக்கு செக்யூரிட்டி தேட யாரும் செட் ஆகவில்லை. ஆனால் ஹைட்டும் வெயிட்டும் ஆக பவுன்சர் போல ஒரு ஆள் வருகிறார். வேலைக்கான டீடைல்ஸ் அவரிடம் சொல்லிவிட்டு பத்தாயிரம் சம்பளம் தருவேன் அப்புறம் வேலைய பாத்துட்டு அதிகமாகுறேன் என்று சொல்லுகிறார். சரின்னு சொன்ன செக்யூரிட்டி சாப்பிடுவதற்கு ஒரு பெரிய லிஸ்ட் போடுகிறார். சம்பளத்தோட சாப்பாடு செலவு தான் அதிகமாக இருக்கும் போல என்று மனோஜ் சொல்கிறார்.
அப்பதான் சார் உடம்பை மெயின்டைன் பண்ண முடியும் யாராவது பிரச்சனைக்கு வந்தா ஒரே கைய தூக்கி கடாசிடுவேன் என்று சொல்ல, மனோஜ் உடனே ஒரு சிலர் எல்லாம் பார்க்க தான் இப்படி இருப்பாங்க ஆனா யாராவது வந்தா பயந்து ஓடிடுவாங்க என்று சொல்ல அந்த செக்யூரிட்டி நேராக மனோஜிடம் சென்று கொஞ்சம் எழுந்திருங்கள் என்று சொல்ல மனோஜை தூக்கி சுற்றுகிறார். மனோஜ்க்கு மயக்கமாக வர கொஞ்ச நேரத்துக்கு கண்மங்கலாக தெரிகிறது. கொஞ்ச நேரம் வெளியே இரு என்று செக்யூரிட்டி அனுப்பி விட்டு இந்த மாதிரி பலசாலி இருந்தா நல்லது தானே என்று ரோகினி சொல்ல சரி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துடலாம் என்று முடிவு எடுக்கின்றனர்.
மறுபக்கம் மீனாவிடம் வந்து செல்வம் அறுபதாம் கல்யாணம் செய்யப்போவதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் தேவை என்றும் சொல்லுகிறார். அவ்ளோ காசுக்கு என்ன பண்றது என்று கேட்க அதுதான் நம்ம ஜெயிச்சோம்ல அந்த காசு இருக்குல்ல அதை குடு என்று சொல்லுகிறார். ஆனால் மீனா அது நம்ம வீடு கட்டறதுக்காக வச்சிருக்கோம் அதை எப்படி கொடுக்க முடியும் என்று சொல்ல அது முக்கியமா இல்ல வீடு முக்கியமா என்று மீனாவிடம் கேட்கிறார். நான் அவன்கிட்ட வாக்கு கொடுத்துட்டேன் நான் காசு கொடுத்தே தான் ஆவேன் என்று சொல்ல, நான் அறுபதாம் கல்யாணம் நடக்கிறது தப்பு சொல்லல நம்ம கைல காசு இருக்கிற மாதிரி தான் நடத்தணும் அதை விட்டுட்டு ஆடம்பரமா பண்றது என்னால ஒத்துக்க முடியாது நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முத்து அது என் காசு என்று சொல்லுகிறார் அப்ப நானும் தான விளையாட அது என் காசு என்று சொல்ல அம்பதாயிரம் என் பங்கு மட்டும் குடு என்று சொல்ல இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். முடிவாக மீனா கொடுக்க முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மீனா பூ கட்டுபவர்கள் இடம் நடந்த பிரச்சனையை சொல்ல நீ பண்ணது தான் கரெக்ட் மீனா உன் முடிவுல நீ உறுதியா இரு என்ன சண்டை வந்தாலும் ரெண்டு மூணு நாலு சரியாயிடும் என்று சொல்லுகின்றனர்.
பணத்திற்காக முத்து என்ன செய்யப் போகிறார்? சொன்னதை செய்து முடிப்பாரா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.