கள்ளக்குறிச்சி அருகே வரும்போது விபத்தில் சிக்கி உள்ளார் நடிகர் ஜீவா.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் தமிழில் ஆசை ஆசையாய், தித்திக்குதே ,ராம், ராமேஸ்வரம், சிவா மனசுல சக்தி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்று சொல்லலாம்.
இவர் மனைவியுடன் சென்னையிலிருந்து சேலம் காரில் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குறுக்கே இரு சக்கர வாகனம் வந்ததால் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி காரின் முன்பாகம் முழுவதுமாக சேதாரம் ஆகி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவாவும் அவரது மனைவியும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர். உடனடியாக மாற்றுக் கார் வரவைத்து இருவரும் அதில் கிளம்பிவிட்டனர்.
பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் அந்த இடத்தில் பரபரப்புக்குள்ளானது.