கோட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சினேகா கிடையாது என்ற தகவலை கூறியுள்ளார் வெங்கட் பிரபு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியானது.வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன், யோகி பாபு, லைலா, ஜெயராம், பிரேம்ஜி, போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூலிலும் மிரட்டி வருகிறது என்றே சொல்லலாம். ஆறு நாட்களில் 300 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. குறிப்பாக இந்த படம் நான் ஒரு கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வெங்கட் பிரபு கோட் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சினேகா கதாபாத்திரத்திற்கு முதலில் நயன்தாராவை தான் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் படத்தைப் பார்த்து நயன்தாரா சினேகா தான் பொருத்தமான ஜோடி என்றும் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் என்று பாராட்டியுள்ளார். இன்னும் முக்கியமாக சினேகாவின் நடிப்பை பாராட்டி நயன்தாரா பேசியதை இன்னும் சினேகாவிற்கு சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார்.
இவரின் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.