கோபத்தில் கோபி இருக்க இனியாவிற்கு ஆறுதல் சொல்லி காலேஜுக்கு அனுப்பி வைக்கிறார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க ஜெனி இப்ப கேக்குறது தப்பா இருக்குமான்னு தெரியல ஆன்டி ரெஸ்டாரன்ட் எப்போ ஓபன் பண்ணுவீங்க என்று கேட்க நானும் அதை தான் யோசிச்சுகிட்டு இருக்கேன் ஜெனி நாளைக்கு ஓப்பன் பண்ணலாம்னு இருக்கேன் என்று சொல்லுகிறார். செல்வியிடம் நீ ஆள கூட்டிட்டு போய் கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கோ கிளீன் பண்ற வேலை இருக்கு இன்னைக்கே கூட்டிட்டு போ என்று சொல்லுகிறார். இனியா வர காபி போடவா இனியா என்று பாக்கியா கேட்க இல்லம்மா கொஞ்சம் லேட் ஆகும் என்று சொல்லுகிறார். காலேஜ் போலயா என்று கேட்க நாளைலிருந்து போறேன் என்று சொல்லுகிறார்.
ஈஸ்வரி வந்து உட்கார இனியா நீங்க பொட்டு வைக்காம நல்லா இல்ல பாட்டி என்று சொல்ல உடனே பாக்யா பொட்டு வைக்க போக ஈஸ்வரி வேண்டாம் என தடுக்கிறார். இருந்தாலும் பாக்யா மாமா நீங்க இப்படி இருக்க தான் ஆசைப்படுவாரு என்று சமாதானப்படுத்தி அவருக்கு பொட்டு வைத்து விடுகிறார். பிறகு செல்வி ஈஸ்வரியிடம் கண்டிப்பா ஜெனிக்கு ஆம்பள பிள்ளை தான் பொறக்கும் அய்யாவே வந்து பிறப்பார் என்று சொல்ல ஈஸ்வரி உன் வாய் முகூர்த்தம் பலிச்சா ரொம்ப சந்தோஷம் செல்வி என்று சொல்லுகிறார்.
எழில் வீட்டுக்கு வந்து அனைவரையும் கூப்பிட்டு உட்கார வைத்து என்ன என்று கேட்க நான் தாத்தாவோட வீடியோ எடிட் பண்ணிட்டேன் அதை உங்களுக்கு போட்டு காமிக்கிறேன் என்று சொல்ல அதுக்குள்ள வீடியோ வந்துடுச்சா என்று கேட்க இது அந்த வீடியோ இல்ல இது நான் எடுத்த வீடியோ என்று அதை போட்டு காமிக்கிறார். ராமமூர்த்தி எல்லோரிடமும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தார் என்பதை பார்த்து அனைவரும் கண்கலங்குகின்றனர். எப்படி குழந்தை மாதிரி நடந்துக்கிறார் பாருங்க அவருக்கு எல்லாமே தெரிஞ்சி தான் எல்லார்கிட்டயும் பாசமா நடந்துகிட்டு இருந்திருக்காரு, அவர ரொம்ப சந்தோஷமா தான் வழி அனுப்பி இருக்கோம் என்று ஈஸ்வரி சொல்லிவிட்டு இன்னொரு முறை வீடியோவை போடுமாறு எழிலிடம் சொல்கிறார்.
கோபி வாக்கிங் செல்ல செழியனும் எழிலும் வருகின்றனர். கோபியிடம் வந்து ஒரு ஒருவராக உங்க அப்பாக்கு நீங்க சடங்கு செய்யலாமே பாக்கியா செஞ்சாங்கலாமே என்று எல்லாம் கேட்க கோபி கடுப்பாகிறார். ஒருவரிடம் சட்டையை பிடித்து விட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை எங்க அப்பா செத்துப் போயிட்டாரு ஆத்மா சாந்தி அடைஞ்சா என்ன அடைய எல்லாம் உங்களுக்கு என்ன நான் எந்த சடங்கும் செய்யக்கூடாது நீ எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு போயிட்டாரு அவங்க சொல்லிட்டாங்க அவ்வளவுதான் விட்டுட்டு போங்க என்று கோபமாக கத்துகிறார். உடனே செழியன் அவரை ஆறுதல் படுத்த போதுமா இப்ப பொய் சொல்லு உங்க அம்மா கிட்டையும் உன் பாட்டிகிட்டையும் அசிங்கப்பட்டு தல குனிஞ்சு போறாரு எல்லா கேள்வி கேக்குறாங்க என்று சொல்ல, அதெல்லாம் சரியாயிடும் நீங்க போங்கப்பா என்று அனுப்பி வைக்கிறார் செழியன்.
இனியா காலேஜுக்கு கிளம்ப தாத்தா உக்காந்திருக்கும் சேரை பார்த்து நான் இப்பவே தாத்தாவை பார்க்கணும் போல இருக்கு என்று கண்கலங்கி அழுகிறார். உடனே ஈஸ்வரி நீ தாத்தாவுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ அப்பதான் தாத்தா சந்தோஷமா இருப்பாரு என்று சொல்ல நான் என்ன பண்ணனும் என்று கேட்க நல்லா படி நல்ல வேலைக்கு போ நல்ல பொண்ணா இரு அது போதும் தாத்தா சந்தோஷமா இருப்பாரு என்று சொல்ல இனியா சரி என்று சொல்லுகிறார். நாம அழுதுகிட்டே இருந்தா தாத்தா சந்தோஷமா இருக்க மாட்டாரு என்று சொல்லி ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார்.
வீட்டுக்கு வெளியே வந்த இனியாவை கோபி பார்க்கிறார். இனியாவை கூப்பிட்டு கோபி என்ன பேசுகிறார்? அதற்கு இனியா சொன்ன பதில் என்ன. என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம் .