தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி டீச்சர் வீட்டுக்கு பால் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். டீச்சர் இரு நந்தினி ஃபங்ஷன் பாத்துட்டு போ என்று சொல்ல இல்ல டீச்சர் எனக்கு இன்னும் நிறைய வீட்டுக்கு பால் கொடுக்கணும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
போகும் வழியில் ஒருவர் குழந்தை ரொம்ப பசியோட இருக்கு கொஞ்சமாக பால் குடு நந்தினி என்று கேட்கிறார். இல்லக்கா ஏற்கனவே கொஞ்சமாதான் இருக்கு என்று சொல்ல குழந்தை அழுதுகிட்டே இருக்குமா என்று சொன்னவுடன் நந்தினி அந்த விஷம் கலந்த பாலை கொடுக்கிறார். கொஞ்சம் தூரம் சென்றவுடன் ஒரு வேன் வந்து சைக்கிளில் மோதி விட நந்தினி கீழே விழுகிறார். சாலையில் மொத்த பாலும் கொட்டி விடுகிறது. ஒரு பெரியவர் வந்து என்னாச்சுமா என்று கேட்க வண்டிக்காரன் தட்டி விட்டுட்டு போயிட்டான் பா என்று சொல்லுகிறார் நந்தினி. என்ன ஏதோ கெட்ட வாடை வருது என்று அங்கு இருந்த பெரியவர் பாலில் மோந்து பார்க்கிறார். பாலில் இருக்கும் ஒரு மாத்திரையை எடுத்துப் பார்த்து இது பூச்சி மாத்திரை இதை சாப்பிட்டால் அரை மணி நேரம் கூட உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். உடனே டீச்சர் வீட்டுக்கு சைக்கிளில் வேக வேகமாக ஓட்டிக்கொண்டு போக அந்த நேரம் பார்த்து அனைவருக்கும் டீ கொடுக்கின்றனர். வாயில் வைக்கும் நேரம் பார்த்து நந்தினி கரெக்டாக எல்லாத்தையும் தட்டி விடுகிறார். மேலும் விஷம் கலந்த விஷயத்தை அங்கு இருப்பவர்களிடம் சொல்லி மன்னிப்பு கேட்க டீச்சர் சரி விடுமா யாரும் குடிக்கலைல என்று சொல்லிவிட இன்னொரு வீட்டில் கொடுத்த ஞாபகம் நந்தினிக்கு வருகிறது. உடனே வேகவேகமாக சைக்கிளில் கிளம்பிய நந்தினி பாதி வழியில் சைக்கிள் செயின் அருந்து விழுந்துவிடுகிறது.
பதறிப்போன நந்தினி சைக்கிளை கீழே போட்டுவிட்டு வேகமாக ஓடி வர சூர்யா காரில் எதிரில் வருகிறார். நல்ல வேலை சார் நீங்க வந்தீங்க என்ன தெருமுனையில் இருக்கிற வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று பதற்றத்தோடு கூப்பிட சூர்யாவும் சரி என்னாச்சு என்ன ஆச்சுன்னு கேட்க நீங்க முதல்ல கூட்டிட்டு போங்க நான் சொல்றேன் என்று பதற்றத்தோடு இருவரும் வேகமாக அந்த வீட்டிற்கு வருகின்றனர்.ஆனால் பாலில் விஷம் கலந்த அவனுக்கே அவனது மனைவி டீ போட்டுக் கொடுக்கிறார். இவர்கள் வருவதற்குள் அந்த நபர் டீயை குடித்து விட குழந்தைக்கு கொடுக்கும் முன் நந்தினி தட்டி விடுகிறார். அந்தப் பாலில் விஷம் கலந்திருக்கு என்று சொல்ல அந்த நபர் விஷம் கலந்ததே நான் தான் என்று சொல்லிவிட்டு மயங்கி கீழே விழுந்து விடுகிறார்.
உடனே அவர காப்பாத்துங்க சூர்யா சார் என்று சொல்ல இத்தனை பேரை சாகடிக்க துணிஞ்சு இருக்கான் அவனை ஏன் நான் காப்பாத்தணும் என்று சொல்லுகிறார் இந்த குழந்தைக்காக காப்பாற்றுங்கள் என்று சொல்ல சூர்யா அவனை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் அட்மிட் செய்கின்றனர். சூர்யா இதை யார் செஞ்சி இருப்பாங்க என்று கேட்க நிறைய பேர் இருக்காங்க ஒருத்தன் நகை ஏமாத்தினா அதை நான் மீட்டுக் கொடுத்த, இன்னொருத்தன் தேங்காய் காச ஏமாற்றினான் அவனை போலீசில் பிடித்துக் கொடுத்தேன் இவர்கள்தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்று கரெக்டாக நந்தினி சந்தேகப்படுகிறார்.
உள்ளிருந்து வந்த டாக்டர் இப்போ நல்லா இருக்காரு கரெக்டான டைம்ல வந்து சேர்த்துட்டீங்க இல்லன்னா காப்பாத்திருக்க முடியாது என்று சொல்லுகிறார்.
உள்ளே போய் பார்க்கலாம் என்று சொன்னவுடன் மூன்று பேரும் உள்ளே போய் பார்க்கின்றனர். யார் இப்படி பண்ண சொன்னது என்று நந்தினி கேட்க கரெக்டாக போலீஸ் வந்துவிடுகின்றன. போலீஸ் உன்னை யார் இப்படி பண்ண சொன்னது சொல்லி இது எல்லாம் மாவு கட்டு போட வேண்டியதா இருக்கும் என்று சொல்ல அவன் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் போலீஸ் இடம் சொல்லி விடுகிறார். டாக்டரிடம் இவரை உடனே கைது பண்ற மாதிரி இருக்கும் என்று சொல்ல ஒரு நாள் ஹாஸ்பிடல்ல இருக்கணும் அதுக்கப்புறம் பண்ணிக்கோங்க என்று டாக்டர் சொல்லிவிடுகிறார். அவரிடம் வாக்குமூலம் வாங்கி சூர்யா மற்றும் நந்தின இடம் கையெழுத்து வாங்குகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நானே முடிவு பண்ற அந்த நந்தினியா இல்ல இந்த சுதாகரா என்று கோபமாக பேசுகிறார். நந்தினியின் மாமா குடுபுடுப்புக்காரர் வேஷத்தில் வந்து பாசமா பேசுற ஐயாவுக்கும், கோபமா பேசுற அம்மாவுக்கும், தாவணி போட்ட பொன்னால பிரச்சனை வரும் என்று சொல்லுகிறார்.
சூர்யா இங்க நேர்மையா இருந்தா யாருக்கும் பிடிக்காது என்று சொல்ல அதற்கு நந்தினி எல்லா தப்பையும் வேடிக்க பாக்க முடியுமா சார் என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.