Thalapathy 63

Vijay Name in Thalapathy 63 : அஜித்தை போலவே தளபதி விஜய் வித்தியாசமான பெயரில் தளபதி 63 படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போதைய தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் என்றால் அது அஜித்தும் விஜயும் தான் என்பது மறுக்க முடியாத ஒன்றாகி விட்டது.

தளபதி 63 படத்தின் டைட்டில்? புகைப்படத்துடன் அதகளம் செய்யும் ரசிகர்கள்!

இவர்களின் படங்களுக்காக ரசிகர்கள் எப்போதுமே ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பது வழக்கமான ஒன்று. சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் தூக்கு துரை என்ற வித்தியாசமான பெயரில் நடித்திருந்தார்.

அதே போல் தற்போது தளபதி விஜயும் வித்தியாசமான பெயரில் அட்லீ இயக்கி வரும் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த படத்தில் விஜய் மைல்கல் என்ற பெயரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

என்ன மனுஷன்யா, அஜித் ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி – வைரல் வீடியோ.!

இருப்பினும் விஜய் ரசிகர்கள் இதனை ஷேர் செய்து கொண்டாட தொடங்கி விட்டனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.