Viswasam

Thala Ajith : கர்நாடகாவில் தல அஜித் படைத்துள்ள சாதனை ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

கர்நாடகாவில் சினிமாவிற்கெல்லாம் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் மற்ற மொழிகளிலும் நடித்து பிரபலமடைந்து இருப்பார்கள்.

இதனாலேயே பெரும்பாலான படங்கள் கன்னட மொழிகளில் டப் செய்யப்படுவதில்லை.

இதுவே முதல் முறை – தளபதி 63 கதை மற்றும் பாடல்கள் குறித்து ரஹ்மான் பேட்டி.!

அவ்வளவு ஏன் வசூலில் கலக்கு கலக்கு என கலக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுமே கன்னடத்தில் வெளியாகவில்லை.

கடந்த 50 வருடமாகவே இதே நிலை தான் தொடர்ந்து வருகிறது. அப்படியான நிலையில் தல அஜித்தின் படங்கள் மட்டும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விவேகம் திரைப்படம் கமாண்டோ என்ற பெயரில் வெளியாகி வசூலில் பேயாட்டம் ஆடியது. இதனையடுத்து ஆரம்பம் தீரா என்ற பெயரிலும் என்னை அறிந்தால் திரைப்படம் சத்யதேவ் IPS என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டது.

இந்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது விஸ்வாசம் திரைப்படமும் ஜகமலா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இரண்டே நாளில் 7 படங்கள் ரிலீஸ் – அதிரடியான லிஸ்ட் இதோ.!

இந்த படத்திற்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.