Thalapathy 63

Thalapathy 63 Songs : இதுவே தென்னிந்திய சினிமாவில் முதல் முறை என ரஹ்மான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி 63 படம் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படமான தளபதி 63-ல் நடித்து வருகிறார்.

அஜித்தை போலவே தளபதி 63-ல் வித்தியாசமான பெயரில் விஜய் – பெயருடன் லீக்கான தகவல்.!

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த ராஜ் என பலர் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

தளபதி 63 விளையாட்டை மையமாக கொண்ட கதை என ஏற்கனவே தகவல்கள் உலா வந்த நிலையில் தற்போதும் ரஹ்மானும் அதனை உறுதி செய்துள்ளார்.

ஹாலிவுட்தில் பீலே, லகான் போன்ற படங்களுக்கு நான் இசையமைத்துளேன். இந்த படங்களை அட்லீ ரசித்து பார்த்துள்ளார்.

அந்த படங்களின் பாணியில் தான் இப்படத்தின் இசையும் இருக்கும். இப்படி இசை அமைப்பது தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல் முறை.

தளபதி 63 படத்தின் ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம் – கோபப்பட்ட அட்லீ.!

அட்லீ மிகவும் உணர்ச்சிகரமான இயக்குனர், எதையும் கடமைக்காக செய்யாமல் ரசித்து ரசித்து செய்பவர், இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here