ஜனநாயகனை கொண்டாட வேண்டும்: சிவகார்த்திகேயன் பேச்சு..

சுதா கொங்​கரா இயக்கத்​தில் சிவ​கார்த்தி​கேயன் நடித்துள்ள ‘பராசக்​தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகிறது. இச்சூழலில் வெளியான டிரெய்லர் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

இப்படத்தில் ரவிமோகன், அதர்​வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்​துள்​ளார். டான் பிக்​சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ளார்.

இந்நிலையில் இப்​படம் பற்றி சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்​டது. அந்த பெயருக்கு ஏற்​றபடி, இந்​தப் படமும் அதே அளவு தாக்​கத்தை ஏற்​படுத்​தும். 1960-களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்​களை அழைத்​துச் செல்​லும் படம் இது. மாணவர்​கள் எப்போதுமே சக்​தி​ வாய்ந்​தவர்​கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்​ட​வர்​களாக இருந்தார்கள் என்​பதை இந்​தப் படம் அழுத்தமாக காட்டுகிறது.

படத்​தின் உள்​ளடக்​கம் குறித்து பல கருத்​துகள் வெளிவரு​கின்​றன. ஆனால், பலரின் தியாகங்​களை நாம் நேர்​மறை​யாக​வும் மரியாதை​யுட​னும் பதிவு செய்​திருக்கி றோம். இதில் ரவிமோகன் சார், பவர்​புல் வில்​லன் கதா​பாத்​திரத்​தில் வரு​கிறார்.

ஜனவரி 9-ம் தேதி வெளி​யாகும் ‘ஜன​நாயகன்’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்​கள். 33 வருடம் திரைத்​ துறை​யில் மகிழ்​வித்​தவர். கடைசிப் படம் என்று சொல்லியிருக்​கிறார். ஆகவே, ஜனவரி 9-ம் தேதி அதை கொண்​டாட வேண்​டும். அடுத்த நாள் ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்​தி’ படத்​துக்​கு வாருங்​கள்​’ என கூறியுள்ளார்.

sivakarthikeyan welcome to vijay in jananayagan movie
sivakarthikeyan welcome to vijay in jananayagan movie