ஜாலியாக இருந்த ஒருத்தன்: ஜீவா நடிக்கும் ‘ஜியோ’ பட அப்டேட்ஸ்..

Web Ads

தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கூடிய கதைக்களம் வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வகையில் எம்.ராஜேஷ் இயக்கிய வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே, ஜீவா பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. ’ஜியோ’ என இப்படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர்.

‘ஜாலியாக இருந்த ஒருத்தன்’ என தலைப்பிட்டு, அதனை சுருக்கி ‘ஜியோ’ என்று அழைத்து வருகிறது படக்குழு. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இதர படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்தகட்ட விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் ஜீவா உடன் நடித்து வரும் நடிகர்கள் யார் என்பதை படக்குழு வெளியிடவில்லை. ’சிவா மனசுல சக்தி’ படத்துக்குப் பிறகு ஜீவா, ராஜேஷ், யுவன் மூவரும் இப்படத்தில் இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

m rajesh directed actor jeeva team movie update
m rajesh directed actor jeeva team movie update