ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி..

Web Ads

ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. அத்தகைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன், 2003-ல் இயக்குனர் கிருஷ்ண வம்சியை மணந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இயக்குநர் கிருஷ்ண வம்சி தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நாங்கள் விவாகரத்து செய்யவில்லை என கிருஷ்ண வம்சி கூறினார். அவர் சென்னையிலும், நான் ஹைதராபாத்திலும் இருப்பதால் நாங்கள் பிரிந்துவிட்டதாக வதந்திகள் வந்தன. எங்கள் திருமண வாழ்வில் எந்த பிரச்சினையும் இல்லை.

நாங்கள் கணவன், மனைவியாகவே இருக்கிறோம் எனக் கூறி தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கிருஷ்ண வம்சி. ரம்யா கிருஷ்ணன் தமிழில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress ramya krishnan divorce broblrms end
actress ramya krishnan divorce broblrms end