உண்மையை தெரிந்து உடைந்து போன குடும்பத்தினர், மயங்கி விழுந்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
வீடு ஏமாந்த விஷயத்தை தெரிந்து குடும்பத்தினர் அனைவரும் கண்கலங்கியுள்ளனர்.
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் வாங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் வருகிறார். இது என்னோட வீடு நீங்க எப்படிங்க இருக்கீங்க என்று கேட்க இல்ல கதிர் என்றவர் இந்த வீட்டை எங்களுக்கு வித்திருக்காரு என்று மனோஜ் சொல்லுகிறார். கதிர் தானே அவன் இன்னும் ஓனர் கிடையாது அவன் இந்த வீட்ல வாடகை இருந்தாங்க என்று சொல்லுகிறார் எனக்கு இரண்டு மாசம் வாடகை கொடுக்கல என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். ரோகிணி நம்ம ஏமாந்திட்டோமா மனோஜ் என்று சொல்லி மயங்கி விழுகிறார். அனைவரும் அவரை தண்ணீர் கொடுத்து எழுப்புகின்ற. உடனே மனோஜிடம் சென்று நம்ம பணம் போயிடுச்சா மனோஜ் நம்ப ஏமாந்துட்டமா மனோஜ் என்று அழுகிறார்.
விஜயா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கண்கலங்கி அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். உடனே முத்து அவரிடம் நாங்க பணம் கொடுத்து இருக்கோம் சரி எப்படி காலி பண்ண முடியும் என்று சொல்ல நாங்கள் போலீஸ் கிட்ட போறோம் என்று முத்து சொல்லுகிறார் நான் வரும்போதே போலீஸ் போன் பண்ணிட்டு தான் வந்தேன் என்று அவர் சொல்ல கொஞ்ச நேரத்தில் போலீஸ் வருகின்றனர்.
என்ன நடந்தது என்று விசாரிக்க என்னோட வீட்ல வந்து இவங்க ரெண்டு நாளா தங்கி கிட்டு இருக்காங்க என்று அவர் போலீஸ் இடம் சொல்ல எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் உடனே முத்து கதிர் என்பவரிடம் பணம் 30 லட்சம் கொடுத்து இருப்பதை சொல்ல அவர் மிகப்பெரிய ஃபிராடு அவன் இருக்கிற வாடகை வீடு சொந்த வீடுன்னு சொல்லி, போலியான பத்தரித்த தயார் பண்ணி அவன் வித்துக்கிட்டு இருக்கா அவனுதான் தேடிக்கிட்டு இருக்கோம் என்று சொல்ல முத்து இவ்வளவு படிச்சிருக்க விசாரிக்காம எப்படி கொடுத்த என்று திட்டுகிறார். உடனே அண்ணாமலை நாங்க கஷ்டப்பட்டு தான் சார் இது கொடுத்திருக்கோம் என்று சொல்ல அது எங்களுக்கு தெரியாது சார் இது அவங்களோட அவங்க வீட்ல நீங்க எப்படி இருக்க முடியும் என்று கேட்க சரி பத்து நிமிஷம் டைம் கொடுங்க என்று சொல்லி மனோஜிடம் பேசிவிட்டு அந்த வீட்டை விட்டு அனைவரும் கிளம்புகின்றனர் காரில் ஏறும் நேரம் பார்த்து ரோமயா என்ற போர்ட் கொடுக்க ஆள் வருகிறார். அதனை ரவி வாங்க பிரித்து பார்த்துவிட்டு மனோஜிடம் கொடுத்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர்.
வீட்டில் அனைவரும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க அண்ணாமலை மனோஜை திட்டி அடிக்க கை ஓங்குகிறார் ரோகிணி தடுக்க, பிறகு முத்து இதுல என்ன சந்தேகம் ஒன்னு இவன் பணத்தை தூக்கிட்டு ஓடுவான் இல்ல இவன்கிட்ட இருந்து பணத்தை ஏமாத்திட்டு போவாய் தானே நடக்குது வழக்கமா இந்த வீட்ல என்று சொல்ல விஜயா கோபப்படுகிறார். இப்ப எதுக்கு அவனை திட்டிக்கிட்டு இருக்கீங்க அவனே பாவம் ஏமாந்துட்டு இருக்கா என்று விஜயா ஆதரவாக பேச அண்ணாமலை அவன் கெட்டு போறதுக்கு காரணமே நீதான் என்று சொல்லி திட்டுகிறார் அவனுக்கு என்ன நீங்களா பணம் கொடுத்தீங்க திட்றதுக்கு என்று சொல்ல அப்ப பணம் கொடுத்தால்தான் கண்டிக்கனுமா இல்லனா கண்டிப்பா என்று சொல்லுகிறார் முத்து.
ரோகினி முத்து பேசியதை பற்றி சொல்ல அவர் அன்னைக்கே அந்த ஆள விசாரிக்கலாம்னு சொன்னாரு இவர்தான் பண்ணல என்று சொல்ல உடனே முத்துவும் கோவில்ல சகுன தடை வந்தது மீனா சொல்லியும் நீங்க கேட்காம பண்ணியிருக்கீங்க என்று சொல்ல நாங்க பண்ணது எல்லாமே தப்பு தான் நீங்க இப்ப அதுக்கு என்ன சொல்ல போறீங்க என்று ரோகினி கேட்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து அனைவரும் உள்ளே சென்று விட அண்ணாமலை முத்துவை கூப்பிட்டு அந்த ஆள எப்படியாவது கண்டுபிடிக்கணும் நம்ம கொடுத்த அட்வான்ஸ் வாங்கணும் என்று சொல்லுகிறார். நீ அந்த இடத்துல போய் விசாரிச்சு கேட்டுப்பாரு என்று சொல்ல முத்துவும் சரி என சொல்லுகிறார்.
முத்து விசாரிக்க என்ன செய்கிறார்? கண்டுபிடிப்பாரா? அதற்கு எடுக்கப் போகும் முயற்சி என்ன?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.