Pushpa 2

வருத்தத்தில் மயூ, ஈஸ்வரி போட்ட பிளான், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

வருத்தத்தில் மயூ இருக்க, ஈஸ்வரி ப்ளான் ஒன்றை போட்டுள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 24-12-24
BaakiyaLakshmi Serial Today Episode Update 24-12-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா போன் பேசிக் கொண்டிருக்க மயுவை கூப்பிடுகிறார் ஆனால் உள்ளே இல்லாததால் வெளியே வந்து பார்க்க மயூ கோபியின் வீட்டு வாசல் முன் நிற்கிறார். என்னாச்சு மயு எதுக்கு இங்க வந்து நின்னுகிட்டு இருக்க என்று கேட்க டாடி காலேஜ்ல இருந்து வந்துட்டாரு எனக்கு விஷ் பண்றதுக்காக வருவார் இல்ல மம்மி அதனால தான் காத்துக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல, உடனே ராதிகா அவர் வர மாட்டாரு மயூ நீ வா போகலாம் என்று சொல்லி அவரை அழைத்து சென்று விடுகிறார்.

வீட்டில் உட்கார வைத்து உண்மையான பாசம் இருந்தா அவங்களே வருவாங்க அப்படி வராத போது நம்ம தேடி போகணும்னு இல்லை என்று சொல்லி மயுவை சமாதானப்படுத்தி நம்ம புது வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் புது வீட்டோட பங்க்ஷனையும் உன்னோட செலிப்ரேஷனையும் சேர்த்து கிராண்டா பண்ணலாம் என்று சொல்லுகிறார் இது மட்டும் இல்லாமல் நீ ரொம்ப நாளா பீச் ரெசார்ட் போனோனு சொன்னேன்ல அங்கேயும் போகலாம் ஜாலியா இருக்கும் என்று சொல்லி மயு சோகத்தை மாற்றி சந்தோஷமாக பேச வைக்கிறார்.

மறுபக்கம் கோபி போனில் பிரேஸ்லெட் மாடல் பார்த்துக் கொண்டிருக்க ஈஸ்வரி வருகிறார். இது எப்படிம்மா இருக்கு என்று கேட்க சூப்பரா இருக்கு கோபி என்று சொல்லுகிறார்.இனியாக்கும் புடிச்சிருக்கான்னு கேளு என்று சொல்ல இனியவை ஏன் கேட்கணும் என்று கோபி சொல்லுகிறார் இனியாக்கு தானே நீ எடுக்குற என்று சொல்ல இனியாக்கு இல்லை நான் தான் மயு பர்த்டே என்று சொன்னேன்ல அதுக்காக கிப்ட் வாங்கிட்டு போய் நாளைக்கு கொடுத்து விஷ் பண்ண போறேன் என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டுமென்று சொல்லி வலுக்கட்டாயமாக மயூவிற்கு எதுவும் செய்யவிடாமல் செய்கிறார்.

கோபி நாளைக்கு பர்த்டேக்கு கிப்ட் கொடுக்கணும்னு சொன்னனே அம்மா என்று சொல்ல மயூ எங்க போயிடப் போற நகைக்கடை எங்க போய்டப்போது வந்து வாங்கி கொடுத்துக்கலாம் என்று சொல்லி கோபியை குலதெய்வ கோவிலுக்கு வர சம்மதிக்க வைத்து விடுகிறார்.

மறுநாள் காலையில் பாக்யா ரெஸ்டாரன்ட் வேலையை பற்றி போனில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து செல்வி வருகிறார். ரெஸ்டாரன்ட் மெனு மாத்திருப்பதாகவும் அதைப்பற்றி சொல்ல இருப்பதாகவும் பேசிக் கொண்டிருக்க அப்போது ஈஸ்வரி வந்து உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் பாக்யா என சொல்லி அனைவரையும் வரவேற்கிறார். என்ன விஷயம் என்று எல்லோரும் கேட்க குலதெய்வ கோவிலுக்கு போக இருக்கும் விஷயத்தை சொல்லுகிறார். உடனே பாக்யா நான் வரல இப்பதான் ரெஸ்டாரன்ட் பழைய நிலைமைக்கு மாறி இருக்கு இப்ப போய் வர முடியாது என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுகிறார் உடனே ஜெனியும் என்னாலயும் வர முடியாது என்று சொல்ல ஏன் நீ என்ன ரெஸ்டாரன்ட் வச்சிருக்க என்று ஈஸ்வரி கேட்கிறார்.

இல்ல எனக்கு ப்ரக்னன்சி டைம்ல வர கஷ்டமா இருக்கு என்று சொல்லி சமாளிக்க, உடனே ஈஸ்வரி சரி நம்ம எல்லாம் போகலாம் என்று கிளம்ப முடிவெடுக்கின்றனர்.

செழியன் இடம் ஜெனி என்ன சொல்லுகிறார்?பாக்யா பதில் என்ன? கோபி என்ன சொல்கிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 24-12-24
BaakiyaLakshmi Serial Today Episode Update 24-12-24