வீட்டுக்கு பெயர் வைத்த மனோஜ், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!!
மனோஜ் வீட்டிற்கு பெயர் வைத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை தாழ்த்தியும் ரோகினியை திறமையாகவும் பேசுகிறார். மனோஜ் நியூமராலஜிஸ்ட் வராரு என்று சொல்ல அவங்க யாரு என்று முத்து கேட்கிறார். பெயர் வைக்கப் போகிறேன் என்று சொல்ல உனக்கு நான் பிறந்த உடனே பெயர் வைத்துவிட்டார்களே என்று சொல்லுகிறார். இந்த வீட்டுக்கு பெயர் வைக்கணும் என்று சொல்ல விஜயா அவன் என்ன படிச்சா இருக்க அவனுக்கு எதுக்கு இதெல்லாம் விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல முத்துவிற்கு ஆதரவாக மீனா பேசுகிறார்.
உடனே நியூமராலஜிஸ்ட் வந்தவுடன் அவரை வரவேற்கின்றனர். பிறகு அவர் விஜயாவின் முகத்தை உற்றுப் பார்த்து மனோஜோட பொலிவு எங்கிருந்து வந்ததுன்னு பாத்தா அவங்க அம்மா கிட்ட இருந்து தானே தெரியுது என்று சொன்னவுடன் விஜயா சந்தோஷப்படுகிறார். நீ உங்க அம்மாவால தான் இன்னும் பெரிய ஆளாக்க போற என்று சொல்ல விஜயா பெருமைப்படுகிறார். கொஞ்ச நேரம் கழித்து மூவரும் உட்கார்ந்து பெயர் வைக்க வேண்டும் என்று சொல்ல முத்து அன்பு இல்லம் என்று வைக்க வேண்டியது தானே என்கிட்ட கேட்டா நானே சொல்லி இருப்பேன் அதுக்கு எதுக்கு இந்த ஆள் என்று எல்லாம் பேச மனோஜ் அமைதியாக இருக்க சொல்லுகிறார். பிறகு மனோஜிடம் யார் இவரு என்று கேட்க என் தம்பி தான் என்று சொல்லுகிறார். உடனே முத்து என் பேர் எல்லாம் நீங்க மாத்த வேணாம் எங்க அப்பா அழகா முத்துன்னு பேரு வச்சிருக்கார் என்று சொல்ல அண்ணாமலை ஆமா இவன்தான் என் சொத்து என்று சொல்லுகிறார்
பிறகு பெயர் வைக்க ஆரம்பிக்க பார்வதி வருகிறார் அவரை வரவேற்று உட்காரவைத்த பிறகு ஒரு நல்ல பெயர் மாற்றி இருக்கு என்று சொல்லி ரோகினியில் பேரில் ரோ எடுத்து உங்க ரெண்டு பேர் பேர்லையும் ஜா இருக்கிறதுனால ரோஜா இல்லம் என்று வைக்கலாம் என்று சொல்ல அனைவருக்கும் இந்த பெயர் பிடிக்கிறது. ஆனால் முத்து யோசித்து மீனா பூ கட்டுவது நல மீனா வாங்கி இருப்பாங்க எல்லாரும் நினைப்பாங்க என்று சொன்ன வேகத்தில் மனோஜ் வீட்டின் பெயரை மாற்ற சொல்லுகிறார். பிறகு ரோகினிலிருந்து ரோ மனோஜிலிருந்து மா விஜயாவிலிருந்து யாவும் எடுத்து ரோமாயா என்று சொல்ல அனைவரும் முழிக்கின்றனர்.
முத்து ஃபாரின் நாய் பெயர் மாதிரி இருக்கு என்று சொல்ல இந்த பெயரில் இருக்கிற அர்த்தம் உங்களுக்கு தெரியுமா என்று சொல்லி புரிய வைக்கிறார் நியூமராலஜிஸ்ட். அவருக்கு 25 ஆயிரம் கொடுத்து மனோஜ் அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக பேய் ஓட்டுபவர் வந்து இந்த வீட்டில் ஏதாவது பேய் இருக்கா என்பதை செக் பண்ணனும் என்று சொல்லுகின்றார் மனோஜ். பேய் ஓட்டுபவர் யார்?என்ன சொல்லப் போகிறார் ?அதற்கு மனோஜின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.