Pushpa 2

கோபி சொன்ன வார்த்தை, கடுப்பான பாக்யா..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..

கோபி சொன்ன வார்த்தையால் பாக்கியா கடுப்பாகி உள்ளார்.

தமிழ்சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்திருக்க கிச்சனில் பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து எழில் அமிர்தாவும் வீட்டுக்கு வர கோபி அவர்களை வரவேற்கிறார் எழில் எதுவும் பேசாமல் இருக்க அமிர்தா கோபியை நலம் விசாரிக்கிறார்.

BaakiyaLakshmi Serial Episode Update 18-12-24
BaakiyaLakshmi Serial Episode Update 18-12-24

எழில் கேப்பான் என்று நினைத்தேன் நீயாவது கேட்கிறாயே அம்மா நல்லா இருக்கேன் என்று சொல்ல பாக்யா எழில் மற்றும் அமிர்தாவை வரவேற்று காபி கொடுக்கிறார். என்ன விஷயம் எனில் சொல்லாம கொள்ளாம வந்திருக்க என்று கேட்க, பாட்டி தான் வர சொன்னாங்க என்று சொல்லுகிறார் பிறகு கோபி எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு ஆசைப்பட்டால் என்ன தான் எழில் வெளியே போனது சந்தர்ப்ப சூழ்நிலையா இருந்தாலும், அவன் அமிர்தாவையும் குழந்தையும் வச்சு தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா அதனால கோபி தான் எழில வர சொல்லலாம் என்று சொன்னதாக சொல்லி ஈஸ்வரி சொல்லுகிறார்.

ஆனால் பாக்யா இப்போதைக்கு எழில் எங்கேயும் வரமாட்டான் எங்க இருக்கணும் அங்கே தான் இருப்பா என்று சொல்ல, செழியன் மற்றும் இனியா நீ ஏமா இப்படி இருக்க என்று கேள்வி கேட்கின்றனர்.

ஆனால் எழில் நான் இப்போதைக்கு எங்கோ வரமாட்டேன் என்னோட வேலைய முடிச்சுட்டு தான் நான் வருவேன் என்று யார் பேச்சையும் கேட்காமல் முடிவில் உறுதியாக இருக்கிறார். சரிம்மா நான் கிளம்புறேன் என்று கிளம்ப, பாக்யா சாப்பிட்டு போக சொல்லுமாறு சொல்லுகிறார். இல்லம்மா நாங்க வீட்ல போய் பார்த்துக்கிறோம் என்று அமிர்தா சொல்லிவிட்டு இருவரும் கிளம்புகின்றனர்.

உடனே ஈஸ்வரி நீ எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என் புள்ள மேல தான் அக்கறையில்லை என்று பார்த்தால் உன் பையன் மேலே உனக்கு அக்கறை இல்லையா என்று கேட்கிறார். நான் உங்க பையன் விஷயத்தில் தலையிடுவது கிடையாது அதே மாதிரி நீங்களும் என் பையன் விஷயத்துல தலையிடாதீங்க என்று உறுதியாக சொல்லிவிடுகிறார்.

கோபி பாக்கியாவை கூப்பிட்டு குடும்பம் என்பது எல்லோரும் ஒண்ணாதான் இருக்கணும் அதனால அழகா இருக்கும் என்று டயலாக் எல்லாம் பேசுகிறார். உடனே பாக்யா நீங்க சொல்றது எல்லாமே சரிதான் ஆனால் நீங்க சொல்லும்போது தான் வேடிக்கையா இருக்கு என்று சொல்லுகிறார். பிறகு கோபி வார்த்தைக்கு வார்த்தை நம்ம குடும்பம் என்று பேச நம்ம குடும்பமா கிடையாது என் விஷயத்துலயும் என் பசங்க விஷயத்துலயும் நீங்க தலையிடாதீங்க என்று சொல்லுகிறார்.

உடனே ஈஸ்வரி கோபியும் இந்த வீட்ல ஒருத்தன் தான் என்று சொல்ல, பாக்யா என் பையன் சொன்ன வார்த்தையை காப்பாத்திட்டு சாதித்து கெத்தா இந்த வீட்டுக்கு வரட்டுமே என்று சொல்லுகிறார். இதுக்கு மேல ஏதாவது பேசினா நான் எங்கேயாவது போயிடுவேன் என்று சொல்லுகிறார். உடனே எப்படி எல்லாம் பேசுற பாரு என்று ஈஸ்வரி சொல்ல அவர் நம்ம பாக்கியத்தனமா பேசிட்டு விடுங்க அப்புறம் பாத்துக்கலாம் என்று ஈஸ்வரியை அழைத்து சென்று விடுகிறார்.

பாக்கியா என்ன சொல்லுகிறார்?கோபி ராதிகாவிடம் போனில் என்ன சொல்லுகிறார்? அதற்கு ராதிகாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 18-12-24
BaakiyaLakshmi Serial Episode Update 18-12-24