ரோகினிக்காக பேசி அசிங்கப்பட்ட முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகிணிக்காக பேசிய அசிங்கப்பட்டுள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடம் ரவி முத்து இருவரும் ரோகிணிக்காக சப்போர்ட் பண்ணி பேச மனோஜ் நீங்க என்ன பிளான் பண்றீங்கன்னு தெரிஞ்சு போச்சு என்று சொல்லி அம்மாவா என்னால இந்த வீட்ல பாசமா இருக்காங்க அவங்கள பிரிக்க தான இது மாதிரி பண்றீங்க என்று சொல்ல முத்து டென்ஷன் ஆகி மனோஜை துரத்தி விடுகிறார். அதுக்கு தான் இவன கூப்பிடவே வேணாம்னு சொன்னேன் யாராவது கேட்டார்களா என்று சொல்ல ரவியும் சுருதியும் சென்று விடுகின்றனர் உடனே மீனா முத்துவிடம் என்னோட ஏடிஎம் கார்டு உங்ககிட்ட கொடுத்துட வா என்று கேட்க ஏன் என்று முத்து கேட்கிறார் நாளைக்கு அத்தை என்னோடு தான் கேட்டா என்ன பண்றது என்று சொல்ல உடனே முத்து யோசித்து எனக்கு ஒரு ஐடியா வந்து இருக்கு நான் ஏடிஎம் கார்டு கேட்கும் போது என் கையில கொடு என்று சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் அண்ணாமலை உக்காந்து கொண்டிருக்க விஜய வந்தவுடன் மீனா என சத்தமாக கூப்பிட்டு ஏடிஎம் கார்டு கேட்கிறார் மீனா எதுக்கு என்று கேட்க முதல்ல கொடு என்று சொல்ல மீனா ஏடிஎம் கார்டு எடுத்து முத்துவின் கையில் கொடுக்க வர என்கிட்ட ஏன் கொடுக்கிற அம்மா கிட்ட கொடு என்று சொல்ல, அண்ணாமலை எதுக்கு மீனாவோட ஏடிஎம் கார்டு விஜயா கிட்ட கொடுக்கணும் என்று கேட்க இல்லப்பா அம்மா தான் வீட்டோட நிதி அமைச்சர் என்று சொல்லுகிறார் உடனே ரோகினி இடம் ஏடிஎம் கார்டு வாங்கி வைத்த விஷயத்தை சொல்ல விஜயா ஆமாம் என்று சொல்லுகிறார். அதற்கு அண்ணாமலை சம்பாதிக்கிறது அவங்க உங்களோட உரிமை அதையே பறிச்சு வச்சிருக்க இந்த வீட்டோட கீழ வர வாடகை பணம் நீ வாங்கி பண்ண சொன்னேன் அதை இதுவரைக்கும் நான் உன்கிட்ட கேட்டு இருக்கனா ஏன்னா அது உங்க அப்பாவோட வீடு உனக்கு தான் சொந்தம் என்று சொல்லிவிட்டு எனது மாதிரி தான் அவங்க அவங்க சம்பாத்தியம் அவங்க அவங்களுக்கு தான் சொந்தம் என்று சொல்லுகிறார். முத்து இதுவும் ஒரு வகையான கொடுமைப்படுத்துவது தான் என்று சொல்ல ரவி ஸ்ருதியும் அதையே சொல்லுகின்றனர்.
உடனே மனோஜ் இப்ப அம்மா என்ன தப்பு பண்ணிட்டாங்க என்று கேள்வி கேட்கிறார். ஏற்கனவே வீட்டு செலவுக்கு காசு கொடுக்குறாங்கல்ல அதையும் மீறி வாங்கி வச்சா தப்பு தானே என்று மீனா சொன்ன உடனே ரோகினி வந்து ஆன்ட்டி மேல எந்த தப்பும் கிடையாது ஆன்ட்டி பண்ணது சரிதான் அவங்க என்னோட ஏடிஎம் கார்டு வாங்கி வச்சதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாகி விடுகின்றனர். உடனே விஜயா எப்பயாச்சும் புரிஞ்சுதா என்று சொல்லிவிட்டு சென்றுவிட முத்து இவங்களுக்கு போய் பேச வந்தேன் பாரு பார்லர் அம்மா உனக்கு ஒரு பெரிய கும்பிடு என்று சொல்ல ரோகிணி உள்ளே சென்று விடுகிறார் உடனே முத்து மீனாவிடம் என் மூஞ்சில காரி துப்பு மீனா என்று சொல்லுகிறார் உடனே அண்ணாமலை இடம் சென்று என்னை கன்னத்தில் இரண்டு அரை விடுப்பா என்று சொல்லி சொல்லுகிறார் உடனே ஸ்ருதியிடம் சென்று என்ன இங்கிலிஷ்ல திட்டு என்று சொல்ல அண்ணாமலை நீ பண்ணது எதுவும் தப்பில்ல விஜயா ஏடிஎம் கார்டு வாங்கி வச்சது தப்புதான் ஆனா அதை ரோகிணி சரின்னு சொல்லும்போது நம்ம ஒன்னும் பண்ண முடியாது விட்டுடு என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் முருகன் பைக்கில் வர அருணை பார்த்து வண்டியை நிறுத்தி உங்களை பார்த்துட்டு போனதுக்கு அப்புறம் போய் லவ் ப்ரொபோஸ் பண்ண ஓகே ஆயிடுச்சு என்று சொல்ல அதற்கு அருண் பதிலுக்கு பைன் போடுகிறார் ஹெல்மெட் போடாம இருக்கீங்க பைன் கட்டுங்க என்று சொல்ல நம்ப என்ன அப்படியா பழகனும் நம்மளோட பிரண்ட்ஷிப் என்ன ஆகிறது என்று எல்லாம் பேச நான் இப்போ டியூட்டில இருக்கேன் எனக்கு அதுதான் முக்கியம் பைன் கட்டுறீங்களா இல்லையா சொல்லுங்க நான் கட்றேன் ஃப்ரெண்ட்ஷிப்காக அதுதான் பண்ண முடியும் என்று சொல்ல முருகன் நானே கட்டுகிறேன் என்று சொல்லி பைன் கட்டுகிறார். மீனா பூ கட்டுபவருடன் வண்டியில் வர வழியில் அவரது பிரண்டை பார்க்க அவர் பஸ் ஸ்டாண்டில் டிராப் பண்ண சொல்லுகிறார் மூணு பேர் போனா ஃபைன் என்று சொல்லியும் கேட்காமல் மூவராக வருகின்றனர்.
உடனே கொஞ்ச நேரத்தில் அருண் அவர்களை நிற்க வைத்து பேப்பர் எடுத்துக்கொண்டு வர சொல்லுகிறார். மீனா என்ன சொல்லுகிறார்? அதற்கு அருண் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
