நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 12-04-25
Moondru Mudichu Serial Today Promo Update 12-04-25

நேற்றைய எபிசோடில் சூர்யா அருணாச்சலத்திடன் நந்தினி செய்ய வாய்ப்பே இல்லை என்று சொல்ல, நானும் அதே தாண்டா சொல்றேன் என்று அருணாச்சலம் சொல்லுகிறார். நந்தினி பத்தி எனக்கு தெரியும் அவ இது மாதிரி ஒரு கேவலமான வேலையை செய்ய வாய்ப்பே இல்லை என்று சொல்ல சுந்தரவல்லி வாய்ப்பு இருக்கு என்று சொல்லுகிறார். அன்னைக்கு நிறைய திருடிட்டு போனாங்கன்னு சொன்னா ஆனா இப்போ அந்த நகை பூத்தொட்டுக்குள்ள எப்படி வந்தது என்று சுந்தரவல்லி கேட்க சத்தியமா எனக்கு தெரியாது என்று நந்தினி சொல்லுகிறார். இரவு ரேணுகா தான் யாரும் இல்லாமல் இருக்கும் நேரமாக பார்த்து நந்தினி வாங்கி வைத்த பூச்செடி தொட்டிக்குள் நகைகளை மறைத்து வைப்பதை காட்டுகின்றனர். உன் கிட்ட தானே கேக்குறாங்க பதில் சொல்லு என்று சுரேகா சொல்ல தெரிஞ்சா தானே சொல்லுவேன் என்று நந்தினி சொல்லுகிறார். எல்லாரும் சேர்ந்து நந்தினியை கார்னர் பண்றீங்களா என்று கேட்க, மாதவி உன் பொண்டாட்டி நீ நினைக்கிற அளவுக்கு ரொம்ப நல்லவெல்லாம் கிடையாது திட்டம் போட்டு நகையை மறைத்து வைத்திருக்கா என்று சொல்லுகிறார்.

விசாரிக்காம நந்தினி செஞ்சி இருக்க மாட்டானா அடிச்சு சொல்றேன் என்று சொல்ல, அவள பத்தி எனக்கு தெரியும் அவ திருடனும் நினைச்சா எவ்வளவோ திருடி இருக்கலாம் அடிமை மாதிரி வேலை பார்த்துகிட்டு அமைதியா தான இருக்கா, யார் எது பேசினாலும் அமைதியாவே நிற்பாயா எனக்கும் இந்த திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சத்தமா பேச வேண்டியதுதானே? அடிச்சு சொல்ல வேண்டியது தானே என்று கோபமாக கேட்கிறார். எங்க கிட்ட சண்டை போட சொல்லி நீயே சொல்லிக் கொடுக்கிற என்று சொல்ல உங்கள மாதிரி டேவில்ஸ் கிட்ட இருந்து அவளை காப்பாத்திக்க சொல்றேன் எல்லாரும் சேர்ந்து அவள வேட்டையாடிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல, சுரேகா சூர்யாவிடம் வீட்ல காணாம போன நகை இவ வாங்கின பூத்தொட்டிக்குள் எப்படி போகும் என்று சொல்ல அதை விசாரிப்போம் அதுக்குள்ள நீங்களா ஒரு முடிவு எடுக்காதீங்க என்று சூர்யா சொல்லுகிறார். சுரேகா இப்ப வந்த அவ குணம் உனக்கு தெரியுதுன்னா கூடவே இருக்கிற எங்களோட குணத்தை உனக்கு தெரியாதா என்று சொல்ல தெரிஞ்சதனாலதான் இவ்வளவு சொல்றேன் ரீசண்டா தான் அந்த திருடனுங்க வீட்டுக்கு வந்தானுங்க அவனுங்க கூட வெச்சி இருக்கலாம் இல்ல என்று சொல்லுகிறார்.

இவன் நந்தினியை காப்பாத்த என்னென்னமோ பேசிகிட்டு இருக்கான் என்ன பொறுத்த வரைக்கும் இதுக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் என்று சொல்லுகிறார். சூப்பர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் நீங்க நந்தினி மேல கம்பளைன்ட் கொடுங்க நான் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் என்று சூர்யா சொல்லுகிறார். அசோகன் நாங்க என்ன பண்ணும் மாப்பிள்ளை என்று கேட்க டெண்டர் விஷயத்துல பண்ணீங்களே சொல்லவா என்று கேட்க மாதவியும் அசோகனும் முழிக்கின்றனர். வாங்க எல்லாருமே போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று சூர்யா கூப்பிட அருணாச்சலம் வேண்டாம் என தடுக்கிறார். உடனே நந்தினி போலீஸ் ஸ்டேஷன் போகலாம் அப்பாதான் இந்த நகையை யார் எடுத்தாங்க திருப்பி வச்சாங்கன்னு தெரியும் இல்லன்னா என் மேல தான் பழி விழும் என்று சொல்ல சூர்யா நந்தினி சொன்னது தான் கரெக்ட்டு டாடி என்று சொல்லுகிறார். நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுற உள்ள போகலாம் வாங்க என்று சொல்லிவிட்டு அர்ச்சனாவிடம் நீ எப்படிம்மா சூர்யாவை பார்த்தா என்று கேட்க பிரண்டு வீட்டுக்கு போயிருந்தேன் அப்போ சூர்யாவோட கார் பிரேக் டவுன் ஆயிடுச்சு அவசரமா போனோன்னு சொன்னா அதனால கூட்டிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார்.

நந்தினி கிச்சனில் சோகமாக இருக்க அர்ச்சனா வந்து உன் மேல எப்படி இப்படி பழி போடுறாங்கன்னு எனக்கு தெரியல உன்ன பத்தி எனக்கே புரியுது இந்த குடும்பத்தில் இருக்கிறவங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டாங்க யார் புரிஞ்சுக்கலனாலும் சூர்யாவாது உனக்கு சப்போர்ட் பண்றானே அதுவும் ஏதோ சும்மா பேசுறான் அவன் பொண்டாட்டி என்ற உரிமையோட பேசினா இவங்களுக்கெல்லாம் பயம் இருக்கும் என்று சொல்ல என நந்தினி பேசிக்கிட்டே இருக்கேன் அமைதியா இருக்க என்று சொல்ல எல்லாமே என்னோட தலைவிதி என்று சொல்ல அப்படியெல்லாம் பேசாத நந்தினி நீயே போய் சுந்தரவல்லி ஆன்ட்டி கிட்ட போய் நான் எந்த தப்பும் பண்ணலன்னு சொல்ல வேண்டியதுதானே என்று சொல்ல அவங்க என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கிறாங்க என்று சொல்ல அர்ச்சனா ஒருவேளை உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கும் போல என்று சொல்லிவிட்டு எல்லாம் ஒரு நாளைக்கு சரியாயிடும் என சொல்லுகிறார்.

நந்தினியிடம் நந்தினிக்கு ஆதரவாக பேசிவிட்டு வந்து சுந்தரவல்லி இடம் வந்து நந்தினி பற்றி ஏத்தி விடுகிறார். சுந்தரவல்லி எந்த இடத்தில நகையை ஒளித்து வைத்திருக்கிறா கிரிமினல் தான் இப்படி பண்ணுவாங்க என்று சொல்ல, சூர்யா நான் கல்யாணம் பண்ணிக்க நெனச்ச பையன் கடைசியா அவன் நல்லா இருக்கணும்னு நினைச்சா அவனோட பொண்டாட்டி இப்படி இருக்கா உங்களோட தகுதிக்கோ கௌரவத்துக்கும் எப்படியோ நடந்து இருக்க வேண்டியது பேசிக் கொண்டிருக்க அருணாச்சலம் வந்தவுடன் நைசாக வெளியில் சென்று விடுகிறார். இப்ப இவ உன்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தா என்று கேட்க என்ன பேசினா உங்களுக்கு என்ன வீட்ல ஒருத்தி இவ்ளோ பெரிய தப்பு பண்ணி இருக்கா அவளை எதுவும் கேட்க மாட்டேங்கறீங்க அந்த பொண்ணு அமைதியா வந்துட்டு போறா அவள பத்தி பேசுறீங்க என்று கோபப்படுகிறார். இவ்வளவு நடந்தும் நீங்க அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்னு நினைக்கிறீங்களா என்று கேட்ட இதுக்கு எல்லாத்துக்கும் என்கிட்ட பதில் இருக்கு ஆனால் நீ சொன்னா ஏத்துக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யா ரூமில் குடித்துக் கொண்டிருக்க நந்தினி வருகிறார்.

நந்தினி கண்கலங்கி நிற்க சூர்யா நீ எதையும் திருடி இருக்க மாட்டேன் நந்தினி எனக்கு தெரியும் 100% நான் உன்னை புரிஞ்சு வச்சிருக்கேன். நான் உனக்கு தாலி கட்டி தாய்க்குலத்தை டார்ச்சர் பண்றல்ல அதனால அவங்க எல்லாரும் சேர்ந்து உன்ன டார்ச்சர் பண்றாங்க புரியுதா ஆனால் அதுக்காக நீ எதுக்கு உம்முன்னு அழுதுகிட்டே இருக்க, நீ செய்யாத தப்பு யார் செஞ்சேன்னு சொன்னாலும் எதிர்த்து பேசு சண்டை போடு நான் இருக்கேன் நந்தினி என்ன மீறி உன்னை யார் என்ன பண்ண முடியும் என்று கேட்க நந்தினி குடிச்சது போதும் போய் படுங்க என்று சொல்ல, இது தப்பு நீ குடிய பத்தி பேசக்கூடாது இது தப்பு சரியா என்று சொல்லிவிட்டு , நான் எதுல விட்டேன் என்று யோசித்து பிறகு மீண்டும் பேச ஆரம்பிக்கிறார்.

உன் மேல தப்பு இல்ல எதுக்கு அமைதியா இருக்க இப்படி இருக்க கூடாது தலையில மொளகா அரைச்சுட்டு போயிடுவாங்க ஒரு அடி அடிச்சா திருப்பி ரெண்டு அடி அடிக்கணும் அடிக்கடி கொடுத்துக்கிட்டே இருக்கணும் நந்தினி இல்லனா உன்ன கொழைன்னு நினைப்பாங்க, ஏம்மாளின்னு நினைப்பாங்க யாரும் உன்ன பெருந்தன்மை நல்ல பொண்ணு நினைக்க மாட்டாங்க என்று சொல்லிவிட்டு பெட் மேலே உட்கார்ந்து புரியுதா புரியுதா என சொல்லிவிட்டு படுத்து விடுகிறார். சாமி படத்தின் முன் வந்து நின்று நந்தினி அழுது கொண்டே ஒரு ரூபா கூட மத்தவங்க காசுக்குன்னு ஆசைப்பட மாட்டேன் ஆனா என் மேல இவ்ளோ பெரிய பழி போடுறாங்க அந்த நகை எல்லாம் எப்படி தொட்டிக்குள்ள வந்தது ஒருவேளை ரெண்டு நாளுக்கு முன்னாடி திருடனுங்க வந்தனங்களை அவங்க வச்சானுங்களா எனக்கு ஒண்ணுமே புரியல நான் இங்கே இருக்கிற வரைக்கும் என் மேல இருக்கிற திருட்டுப்பழி போகாது நான் இங்க இருந்து போணம் என் குடும்பத்து கிட்ட போயிடனும் தயவு செஞ்சு இதுக்கு மட்டும் உதவி பண்ணு என்று சொல்லி அழுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா மனசுல இருக்குற சந்தேகத்தை எப்படி இப்போ இல்லாம பண்றது அதுக்கு ஏதாவது உருப்படியா ஐடியா சொல்லுங்க என்று சுரேகா அசோகனிடம் மாதவி கேட்கிறார். அர்ச்சனா மினிஸ்டரிடம் அந்த வீட்டில் இருக்கிற மொத்த சிச்சுவேஷனையும் நந்தினிக்கு எதிரா மாத்தியாச்சு என்று சொல்லுகிறார்.

அந்த சுதாகர் வேற ஜெயில்ல இருந்து வரான் என் குடும்பத்தை ஏதாவது பண்ணிட்டா என்ன சார் பண்றது என்று நந்தினி சொல்ல அதற்கு சூர்யா அப்படியெல்லாம் நான் விற்றுவேனா என்று சொல்ல சுந்தரவல்லி இதை கேட்டுக் கொண்டிருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 12-04-25
Moondru Mudichu Serial Today Promo Update 12-04-25