Web Ads

அடுத்த படம் ‘ஏகே64’ இயக்குனரை அஜித் சூசகமாய் அறிவிப்பு: ஃபேன்ஸ் கணிப்பு

அஜித் நடிக்கும் 64-வது படத்தின் இயக்குனர் யார்? என்ற கணிப்பு காண்போம்..

‘தல’ ரசிகர்களுக்காகவே உருவாகி வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வரவேற்பிலும் வசூலிலும் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது. இதன் 2-ம் பாகமும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஒரிஜினல் ஃபேன் பாய் சம்பவமாக ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்திருக்கிறார்.

இந்நிலையில், தனது திரைப்படங்கள் ரிலீஸாகும் முன்பே அடுத்த பட இயக்குனரை முடிவு செய்து விடுவார் அஜித். ஆனால், குட் பேட் அக்லி படத்துக்கு பின் அஜித் நடிக்க உள்ள ஏகே-64 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்? என்பது அறிவிக்கப்படாமலே உள்ளது.

அண்மையில் தனுஷ், அஜித்துக்கு கதை சொன்னதாக தகவல் வெளியானது. இதனால் ஏகே 64 படத்தை தனுஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஒரு புது ட்விஸ்ட் கொடுத்துள்ளார் அஜித். அதன்படி அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்கப் போவதில்லை. முன்னதாக ‘பில்லா’ பட இயக்குனர் விஷ்ணுவர்தன் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், ஏகே-64 படத்தை இயக்கப்போகும் இயக்குனர் குறித்து குட் பேட் அக்லி படத்திலேயே அஜித் ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார் என்கின்றனர் அவரது தீவிர ஃபேன்ஸ். அதாவது, குட் பேட் அக்லி பட கிளைமாக்ஸில் அஜித் ஒரு பிரம்மாண்ட காரில் வந்து இறங்குவார். அவர் வந்த காரின் நம்பர் பிளேட்டில் “DIR AK 64 2026″ என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதன்மூலம் ஏகே-64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார் என்பதையும், இப்படத்தை அடுத்த ஆண்டு 2026-ல் வெளியிட உள்ளதையும் அஜித் சூசகமாக அறிவித்துள்ளதாக ‘தல’ அஜித்தின் தீவிர ரசிகர்கள் கணித்துள்ளது வைரலாகி வருகிறது.

actor ajith in ak64 movie director