Web Ads

முத்து கொடுத்த ஷாக், மனோஜ் சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து சொன்ன வார்த்தைக்கு மனோஜ் பதில் கொடுத்துள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 04-03-25
SiragadikkaAasai Serial Today Episode Update 04-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை டிஸ்சார்ஜ் செய்து ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வருகின்றனர். விஜயா மற்றும் ரோகினி இருவரும் அவரைப் பிடித்துக் கொண்டு நடக்க எனக்கு தான் கண்ணு தெரியுதுல்ல நானே நடந்துக்கிறேன் என்று சொல்ல ரெண்டு நாளைக்கு பாடி பெய்ன் இருக்கும் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு வாங்க என்று அழைத்து செல்கிறார். முத்து கொஞ்ச நாளைக்கு கீழே பார்த்து நடை என்று சொல்ல, நான் எதுக்கு அப்படி நடக்கும் என்று மனோஜ் கேட்கிறார். அதற்கு டாக்டர் தான் வெயில் அதிகமாக பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல என்று சொல்லி மூவரும் உள்ளே வருகின்றனர்.

விஜயா மீனாவை கூப்பிட்டு ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வர சொல்ல விஜயா ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கிறார். பிறகு உள்ளே வந்து உட்கார, முத்து இனிமேலும் அவனைப் பார்த்தால் துரத்திகிட்டு ஓடிக்கிட்டு இருக்காத என்று சொல்ல ரோகிணி அவர் உடம்பு சரியில்லாத போன் இப்படி தான் பேசுவீங்களா என்று கேட்க, ஹீரோவாகளான்னு பார்த்து இருக்கான் கடைசியா காமெடி ஆயிடுச்சு என்று கிண்டல் அடிக்கிறார். உடனே விஜயா மனோஜ் நீ ரெண்டு நாளைக்கு எங்கேயும் போக வேணாம். ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு ரோகினியையும் எங்கேயும் போகாமல் மனோஜை பார்த்துக்க சொல்லுகிறார். ரோகிணியும் சரி என்று சொல்ல, கோவிலுக்கு போற வேலை இருக்கு நான் மனோஜ்க்காக வேண்டி இருக்க அங்கபிரதேஷனம் செய்யணும் என்று சொல்ல ரோகினி எதுக்கு ஆன்டி இதெல்லாம் என்று கேட்கிறார் உடனே மனோஜ் சரி செஞ்சுட்டு வந்துருமா என்று சொல்ல விஜயா நான் செய்றேன்னு வேண்டிக்கல நீங்க ரெண்டு பேரும் வேண்டிக்கிட்டேன் என்று சொல்ல முத்து சிரிக்கிறார்.

எனக்கே இப்பதான் கண்ணு சரியா இருக்கு என்று மனோஜ் சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல சக்தி வாய்ந்த அம்மன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் சுருதி ஹோட்டலில் ஆர்டர் எடுத்துக் கொண்டிருக்க சாப்பிட வந்த ஒரு நபர் அழகா இருக்கீங்க ஸ்மார்ட்டா இருக்கீங்க எதுக்கு இந்த வேலை பாக்குறீங்க இப்பவே வாங்க எங்க ஆபீஸ்ல உங்க சேர்த்துகிட்டேன் என்று சொல்ல இதை எல்லாம் நீத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஸ்ருதி இங்கே தான் என் ஹஸ்பண்ட் செஃப் வேலை பாக்குறாரு அவர்கிட்ட கேக்குறீங்களா என்று சொல்ல சரி வேண்டாம் எல்லாம் ஒன்னும் வேணாம் என்று சொல்லிவிடுகிறார்.உடனே நீத்து ஏதாவது பிரச்சனையா ஸ்ருதி என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ஏதாவது ஒரு கஸ்டமர் இப்படித்தான் இருப்பாங்க நம்மதான் சமாளிக்கணும் விடுங்க பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு இன்னொரு கஸ்டமரிடம் ஆர்டர் எடுக்க வர அது ஸ்ருதியின் அம்மா என தெரிய வருகிறது. உடனே கோபப்பட்டு ஏற்கனவே நீ ஸ்டூடியோக்கு வேலைக்கு போறதே எங்களுக்கு புடிக்கல இதுல ஹோட்டல்ல வேற இந்த வேலை பார்க்கிற என்று திட்டுகிறார்.

நீங்க வேலை பாக்குறது எங்களுக்கு அசிங்கமா இருக்கு உங்க அச்சாக்கு தெரிஞ்சா எவ்வளவு கோபப்படுவார் தெரியுமா? உன்ன வேலைக்கு அனுப்பி தான் அந்த வீட்டில சாப்பிடணுமா என்றெல்லாம் கோபப்பட சுருதி தெரியாமல் எதுவும் பேசாத மம்மி அந்த வீட்ல யாரும் என்ன அப்படி சொல்லல, நானாக விருப்பப்பட்டதா இந்த வேலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல என்று சொல்லி ரவியிடம் பேச வர ரவி வெளியில் வருகிறார் உடனே அவரிடம் உங்க வீட்ல ஏதாவது பண கஷ்டம்னா என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியதுதானே எதுக்கு ஸ்ருதிய இப்படி ரெண்டு வேலை வாங்குறீங்க என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டுவிட்டு சென்றுவிட ரவி ஸ்ருதியிடம் கோபப்படுகிறார். அதனாலதான் உன்னை வேணாம்னு சொன்னேன் இப்போ பாத்தியா என்ன தப்பா நினைக்கிறாங்க, என்று சொல்ல நீ இப்பவே இங்க இருந்து போ என்று சொல்லுகிறார் ஆனால் ஸ்ருதி அவங்க பேசுவதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத, என்று சொல்லிவிட்டு கேஷுவலாக சென்று விடுகிறார்.

மறுபக்கம் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க முத்து ஹாஸ்பிடல் பில் எல்லாத்தையும் எடுத்து அண்ணாமலையிடம் காண்பித்துக் கொண்டே இருக்க விஜயா என்னங்க இதெல்லாம் என்று கேட்கிறார் அந்த நேரம் பார்த்து மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வந்து உட்காரா அவர்களிடம் முத்து ஹாஸ்பிடல் பில் கொடுக்கிறார். அதற்கு மனோஜ் அடிபட்டு இருந்தால் இப்படித்தான் கட்டிட்டு பில் கேப்பாங்களா என்று சொல்ல அண்ணாமலை அந்த நேரத்துல உங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு வெளியே கடன் எல்லாம் வாங்கி கட்டி இருக்கான் இப்பதான் நல்லாயி வந்துட்டீங்களா கொடுத்துடுங்க என்று சொல்லுகிறார். உடனே விஜயா ஒரு குடும்பத்தில் ஒருத்தருக்கு அடிபட்டு இருக்கு அந்த காசு கட்டினது போய் கேக்குறாங்க என்று வம்பு இழுக்க அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். மனோஜ் என்ன சொல்லுகிறார்?ரோகிணியின் பதில் என்ன?முத்து சொன்ன விஷயம் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 04-03-25
SiragadikkaAasai Serial Today Episode Update 04-03-25