உண்மையை சொன்ன மணி.. ரோகினியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய விஜயா.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ.!!
கறிக்கடைக்காரர் மணி அண்ணாமலை வீட்டில் வந்து ரோகினி குறித்த விஷயங்களை சொல்லியும், அதற்கு விஜயா ரோகினியை வெளியே தள்ளுவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது.

siragadikka asai serial upcoming episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பரசு மகள் கல்யாணத்தில் கறிக்கடைக்காரர் மணி அண்ணாமலை குடும்பத்திடம் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை ஆனால் தற்போது மண்டபத்தில் நகை திருட்டு சம்பவத்தை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்து அவர்களிடம் நகையை பிடுங்கி ஒப்படைக்க இதனை பரசு மாப்பிள்ளையின் தாய் மாமனான மணியிடம் சொல்ல அவர் அவர்களுக்கு மாலை மரியாதை செலுத்தி நன்றி சொல்ல வேண்டும் என சொல்லுகிறார்.
இதனால் முத்து,மீனா இருக்கும் இடத்திற்கு மேளதாளத்துடன் கறிக்கடைக்காரர் மணி வருகிறார்.அவர் முத்துமீனாவை சந்திக்கிறாரா? இல்லையா? என்ன நடக்கும் என்பது பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அடுத்த வாரம் வெளியான ப்ரோமோவில் மணி அண்ணாமலை வீட்டிற்கு வந்து ரோகினி குறித்த உண்மைகளை சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சியாக விஜயா ரோகினியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். இந்த சம்பவம் நிஜமாக இருக்குமா இல்லை இது வழக்கம்போல் கனவாக இருக்குமா என்பதை இனி வரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial upcoming episode update