சித்தார்த் நடிக்கும் ‘ரவுடி அண்ட் கோ’ படக்கதை குறித்து இயக்குநர் பேச்சு..

Web Ads

‘சித்தா’ படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த தொடர், கார்கில் போர் பற்றிய வரலாற்றுக் கதையாக உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் சித்​தார்த், ராஷி கன்னா ஜோடி​யாக நடித்​துள்ள நகைச்சுவை படத்​துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்​ஸ்​ஸி, பிராங்க்​ஸ்​டர் ராகுல், வெற்றி மணி, சார்​லஸ் வினோத் ஆகியோர் நடித்​துள்ளனர். வம்சி வில்லனாக நடித்துள்ளார்.

Web Ad 2

இதை ‘டக்​கர்’ படத்தை இயக்​கிய கார்த்​திக்.ஜி கிரிஷ் இயக்​கி​யுள்​ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேவா இசையமைத்​துள்​ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரித்துள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்​தின் டைட்​டில் குறித்து கார்த்​திக்.ஜி கிரிஷ் கூறும்​போது,

‘வுடிகளின் கார்ப்பரேட் சாம்​ராஜ்​யம் பற்​றிய கதை என்​பதால், இந்த தலைப்பை வைத்துள்ளோம். முழுவதும் நகைச்​சுவை நிறைந்த என்டர்டெயினராக இப்படம் இருக்​கும். படப்பிடிப்பு நிறைவடைந்​து​ விட்​டது. இன்​னும் 15, 20 நாட்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நிறைவடைந்​துவிடும்​’ என தெரிவித்தார்.

siddharth in rowdy and co movie full of comedy story plays
siddharth in rowdy and co movie full of comedy story plays