பிரபுதேவா, சிம்ரன் நடிக்கும் கமல் ஸ்ரீதேவி

Web Ads

சீயோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவா மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சீயோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர்.

பிரபுதேவா, சிம்ரன் இணைந்து நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகி வருகிறது.

ஏற்கெனவே சீயோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளையும், ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், சேகர் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

அனுவர்தன் மற்றும் நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். கேமரா செந்தில் விளம்பரப் புகைப்படங்களையும், மணியன் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களையும் மேற்கொள்கின்றனர். R.J.சுரேஷ் குமார் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றுகிறார்.

Web Ad 2

மேலும், கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பையும், சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். சிவகாந்த் தலைமை இணை இயக்குநராகவும், தினேஷ் E. இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார். பிரசாந்த் செயல் தயாரிப்பாளராகவும், சரத் J. சாமுவேல் இணைத் தயாரிப்பாளராகவும் உள்ளனர்.

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது.

மூணாறு மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.