நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கும் புதிய திரைப்படம் ’பிளாக் நைட் பாய்ஸ்’

Arul Murugann Picture மற்றும் Dream Runway 26th Century நிறுவனங்கள் சார்பில் க.இ. மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. அமல் அஜித் கதாநாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், தனது சமூக வலைதள வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களமிறங்குகிறார்.
நடிகை தேவயானி மற்றும் இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மகளான பிரியங்கா ராஜகுமாரன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அமல் அஜித்துக்கு ஜோடியாக அவர் நடிக்கும் இப்படம் இளைஞர்களைக் கவரும் காதல் கதையுடன், குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ரசிக்கும் வகையிலான முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகிறது.
காதல், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ உருவாகி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட க.இ. மணிகண்டன் என்கிற விமல் G, தனது தயாரிப்பு அனுபவம், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் திறன்களைப் பயன்படுத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இப்படத்தை செம்பர் V. முருகேசன் இயக்குகிறார். ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக T. முத்துராஜ் பணியாற்றுகிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார்.
மேலும், படத்தொகுப்புப் பணிகளை இளங்கோ கவனிக்கிறார். கலை இயக்குநராக கண்ணன் S, சண்டைப் பயிற்சியாளர்களாக P.C. ஸ்டண்ட்ஸ், நடன இயக்குநராக பாபா பாஸ்கர், பாடலாசிரியராக பா. விஜய் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.’
