புற்றுநோயிலிருந்து மீண்ட சிவராஜ்குமார்: ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் மீண்டும் கமிட்
ஜெயிலர்-2 படத்தில் நடிக்க சிவராஜ்குமார் கால்ஷீட் கொடுத்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதுபோல கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிவராஜ்குமார். இவர், முன்னதாக ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். ‘ஜெயிலர்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து ஆடியன்ஸின் கைத்தட்டல்களை பெற்றார்.
கடைசியாக, தனுஷ் உடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு தமிழில் வரவேற்பு கிடைத்ததால், சோலோவாக ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தார். அந்த படத்தில் ஈட்டி படத்தின் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை முடிந்து கமிட் ஆனார்.
இறுதியில் அவருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருந்ததால், அந்த படத்தில் இருந்து விலகினார்.
சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய சிவ ராஜ்குமார் ஓய்வில் இருந்தார். தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டு விட்டதால், தான் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்காக மீண்டும் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
முதலில் நடிக்க மறுத்த ஜெயிலர் படத்தின் 2-ம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி, சுமார் 20 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவராஜ்குமார் தனது 131-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இன்று (மார்ச் 4-ம் தேதி) படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு படக்குழுவினர் ஆரத்தி எடுத்து, திருஷ்டி சுற்றி வரவேற்பு அளித்தார்கள். இது தொடர்பான நிகழ்வுகள் அவரது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.