ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ பட அப்டேட்ஸ்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் விமர்சனரீதியாக மட்டுமின்றி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படம் 700 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ரஜினியுடன் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சந்தானமும் இப்படத்தில் முக்கியமான ரோல் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் கவுரவ வேடத்தில் நடித்த சிலர் இதிலும் நடிக்கின்றனர். மேலும், எஸ்.ஜே.சூர்யா, இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த சிவ ராஜ்குமார் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. அவர், படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் பரவி வருகின்றன.

shiva rajkumar starts filming for the jailer 2

shiva rajkumar starts filming for the jailer 2