‘மதராஸி’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி: ஏ.ஆர்.முருகதாஸ் சுவாரஸ்ய தகவல்..

Web Ads

ஒரு திரைப்படத்தின் கதை பட்ஜெட்டுக்கேற்ப, நடிகருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எப்படியெல்லாம் மாற்றம் பெறுகிறது என காண்போம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘மதராஸி’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் இந்த படத்துக்காக வேறொரு கிளைமேக்ஸ் காட்சியை திட்டமிட்டு இருந்ததாக ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

‘மதராஸி’ படத்துடைய ஒரிஜினல் கிளைமேக்ஸ் காட்சி மாலதியின் மரணத்துடன் முடிவதாக இருந்தது. மாலதி தனது வாழ்க்கையில் இருந்து மறைந்த பிறகு, ஹீரோவான ரகு மற்றவருக்கு உதவவில்லை. அதே நேரம் அவள் இறந்த பிறகு உதவுவதாக இருந்தது.

Web Ad 2

ஆனால் ரகு, மாலதியை காப்பாற்றவில்லை என்றால், ஹீரோவுடைய கதாபாத்திரம் வலு இல்லாததுபோல் தெரியும். எனவே படப்பிடிப்பின் பாதியில் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றினோம்.

அதோடு வில்லனாக நடித்த வித்யூத் ஜாம்வால் , சபீருக்காக ஒரு பிளாஸ்பேக் காட்சியும் திட்டமிட்டு இருந்தோம். போலீசார் 18 வயதில் இருவரையும் கைது செய்து என்கவுண்டரின் போது வித்யூத் ஜாம்வாலுக்காக, சபீர் தனது கையை இழப்பதை போன்று காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அனிமேஷன் சரியாக அமையாத காரணத்தால் படத்தில் அந்த காட்சி இடம்பெறவில்லை’ என தெரிவித்துள்ளார்.

ar murugadoss about madharaasi movie climax scene
ar murugadoss about madharaasi movie climax scene