ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக, நடிகை நவ்யா நாயருக்கு லட்சம் ரூபாய் அபராதம்..

ஆஸ்​திரேலி​யா​வின் விக்​டோரியா மாகாண மலை​யாளி​கள் கூட்டமைப்பு சார்​பில், கடந்த 6-ம் தேதி மெல்​போர்ன் நகரில் ஓணம் பண்​டிகை கொண்​டாடப்பட்​டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்தின​ராக பங்​கேற்றார்.

இவ்விழா​வில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் மெல்​போர்ன் நகருக்கு விமானத்​தில் சென்றார். அப்​போது அவர் ஒரு முழம் மல்லிகை பூவை கைப்பை​யில் எடுத்​துச் சென்​றார். மெல்​போர்ன் விமான நிலை​யத்​தில் நவ்​யா​வின் உடைமைகளை அந்த நாட்டு அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.

அப்​போது அவரது கைப்​பை​யில் ஒரு முழம் மல்​லிகை பூ இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதற்​காக அவருக்கு ரூ.1.14 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. இதுகுறித்து நவ்யா நாயர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்பதாவது:

‘எனது அப்​பா, இரண்டு முழம் மல்​லிகை பூவை வாங்​கி​னார். அந்த பூவை இரு துண்டுகளாக வெட்டி என்​னிடம் தந்​தார். நான் கொச்​சி​யில் இருந்து சிங்​கப்​பூர் சென்று அங்​கிருந்து மெல்​போர்ன் சென்​றேன். எனவே சிங்கப்பூர் செல்​லும் வழி​யில் ஒரு முழம் பூவை சூடிக் கொண்​டேன்.

மெல்​போர்ன் விமான நிலை​யத்​தில் நடை​பெற்ற சோதனை​யின்​போது மல்​லிகை பூவை அதி​காரி​கள் கண்​டு​பிடித்​தனர். அந்த நாட்டு சட்ட விதி​களின்​படி மல்​லிகை பூவை கொண்டு செல்​வதற்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. எனவே எனக்கு ரூ.1.14 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. இந்த தொகையை 28 நாட்​களுக்​குள் செலுத்த காலஅவகாசம் வழங்கப்​பட்டு இருக்​கிறது’ என தெரிவித்துள்​ளார்.

navya nair fined in australia for carrying jasmine
navya nair fined in australia for carrying jasmine