Pushpa 2

செல்வராகவன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ‘மெண்டல் மனதில்’ ஷூட்டிங் அப்டேட்…

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற வித்தியாசமான காதல் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் செல்வராகவன். இவர், தற்போது நடிகராகவும் பவனி வருகிறார்.

தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளியில், இப்போது ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜையுடன் சூட்டிங் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

காதலை மையமாக கொண்டு, இந்தப் படத்தின் கதைக்களத்தை செல்வராகவன் உருவாக்கியுள்ளார். இப்படத்தில், ‘காதலை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காணலாம். ஆனந்தமும் அழுகையும் கலந்த உணர்வியலாய் படம் இருக்கும்’ என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்து, தயாரித்து, நாயகனாகவும் மாறியுள்ளார். அவருக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் இணைந்துள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வித்தியாசமான வகையில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், பட்டாம்பூச்சிகளுடன் ஜி.வி.பிரகாஷ் காணப்படுகிறார். காதல் உணர்வை பட்டாம்பூச்சிகளுடன் ஒப்பிடும் வழக்கம் உண்டு. அதைக் குறிக்கும் வகையில் போஸ்டர் அமைந்துள்ளது. காதலை உரக்க பேசும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, தற்போது சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், நெட்டிசன்ஸ், காதல் கொண்டேன்-2, 7ஜி ரெயின்போ காலனி-2 என திரைவண்டியை ஓட்டாமல், புதிய படைப்புடன் களத்திற்கு வந்த செல்வா சார்.. வாழ்த்துகள்.!’ என தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

selvaraghavan gv prakash in mental manathil movie update
selvaraghavan gv prakash in mental manathil movie update