எல்லாமே இருக்கு, நல்லாவே இருக்கு: ‘கேம் சேஞ்சர்’ பட நிகழ்ச்சியில் ராம் சரண் ருசிகரம்..
‘அன்பு ரசிகர்களே.! உங்களுக்கு என்ன வேண்டும், இதோ இங்கே எல்லாமே இருக்கிறது’ என ஒரு தயாரிப்பாளர் உத்தரவாதம் அளித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன்-2 படம் ஆடியன்ஸை திருப்திபடுத்தவில்லை. இதனால், இந்தியன்-3 படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்ற பேச்சு ஒருபுறம் ஓடிக்கொண்டுள்ளது.
இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பணிகளில் தீவிரமாக இறங்கினார் ஷங்கர். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி இருந்தாலும், தென்னிந்திய மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது, படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அவ்வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண், தயாரிப்பாளர் தில் ராஜுவை அழைத்து, ‘வாரிசு படத்தின் மேடையில் நீங்கள் சொன்னீர்களே.. அது என்ன? எனக் கேட்க, உடனே தில் ராஜு மேடைக்கு வந்து ராம் சரண் காதுகளில், வாரிசு பட மேடையில் தான் கூறியதை ரகசியம்போல கூறிவிட்டுப் போனார்.
உடனே ராம் சரண், ‘உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது எல்லாமே இந்தப் படத்தில் இருக்கின்றது’ என கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி பலமாக சிரித்தார்கள்.
காரணம், விஜய்யின் வாரிசு படத்தைத் தயாரித்த தில் ராஜு, தெலுங்கு பட தயாரிப்பாளர். மேலும் அவரது தாய்மொழி தெலுங்கு. தமிழ்நாட்டில் ‘வாரிசு’ பட இசை வெளியீட்டு விழாவில், பேசுகையில், ரசிகர்களை நோக்கி, ‘உங்களுக்கு பாட்டு வேண்டுமா, பாட்டு இருக்கு. டான்ஸ் வேண்டுமா.. டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா.. ஃபைட் இருக்கு…’ என கூறினார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் மீம்ஸ் கிரியேட்டாக மாறி வைரலாகி விட்டது.
இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் புரோமோஷன் விழாவில் ராம் சரண் இவ்வாறு பேசியது, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும், இப்படத்தில் மிக சேலஞ்சாக எகிறி, உத்வேகத்தோடு கேம் ஆடியிருப்பார் ஷங்கர் என திரை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.