ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சவுபின் சாஹிர் போட்ட பதிவு..!

Web Ads

ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சவுபின் சாஹிர் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

Saubin Sahir posted a picture of him with Rajini

Saubin Sahir posted a picture of him with Rajini

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் 500 கோடி வசூலையும் நெருங்கி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர், போன்ற பல பிராபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சவுபின் சாஹிர், அமீர்கான் மற்றும் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த படத்தில் நடித்தது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதாவது சில சமயங்களில் சினிமா கனவுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. உங்கள் அன்புக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி. கூலி படமும் தயாள் கதாபாத்திரமும் எப்போதும் எனக்கு நெருக்கமாக இருக்கும் அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Soubin Shahir (@soubinshahir)