நான் ரசித்துப் பார்த்த தமிழ்ப்படம்: சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்..

Web Ads

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இணையத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் அடிக்கடி படங்கள் பார்ப்பீர்களா? சமீபத்தில் நீங்கள் ரசித்த படம் எது?’என்று கேட்டார்.

அதற்கு சச்சின் ‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் படம் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்து ரசித்த படங்கள் ’3பிஹெச்கே’ மற்றும் ’ஆட்டா தம்பாய்ச் நாய்’ என்றார்.

Web Ad 2

இந்தப் பதிலால் ‘3 பிஹெச்கே’ படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, ‘பலமுறை டைப் செய்து, என்ன வார்த்தைகளால் விவரிப்பது என்று தெரியவில்லை. சில வார்த்தைகளை கண்டுபிடித்து பின்பு சொல்கிறேன். ஏனென்றால், நான் இப்போது என் கற்பனைக்கு எட்டாத ஒரு விஷயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என பெரிதும் மகிழ்ந்துள்ளார்.

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா அச்சர் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘3பிஹெச்கே’. அம்ரித் ராம்நாத் இசையமைக்க, அருண் விஸ்வா தயாரித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

cricketer sachin favorite 3bhk the film crew is excited
cricketer sachin favorite 3bhk the film crew is excited