தனுஷின் ‘குபேரா’ பட கிளிம்ப்ஸ்15-ம் தேதி பார்க்கலாம்: ராஷ்மிகா சொல்லும் அப்டேட்

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் தகவலை, ராஷ்மிகா மந்தனா அப்டேட்டாக சொல்லி, ரசிகர்களை மேலும் ஈர்த்திருக்கிறார். இது குறித்த தகவலை அள்ளுவோம் வாங்க..
நடிகர் தனுஷின் குபேரா படத்தை தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக நாகார்ஜுனாவும், நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வரும் 15-ம் தேதி இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார். இதையொட்டி, சூப்பர் கூலான போஸ்டர் ஒன்றையும் அவர் இணைத்துள்ளார். இதில் அவரது அழகு அள்ளுகிறது.
குபேரா படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
படத்தில் யாசகம் கேட்கும் நபரைப் போன்ற தோற்றத்தில் தனுஷை பார்க்க முடிந்தது. அடுத்தடுத்து நாகார்ஜுனா. ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர்களும் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வரும் நவம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இதையொட்டி ராஷ்மிகா, தன்னுடைய மிகவும் அழகான போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்களிடம் இருந்து செம ஹாட்டான கமெண்டுகள் வைரலாகி வருகிறது.
