Pushpa 2

தளபதி விஜய் குறித்து தந்தை எஸ்.ஏ.சி. வெளியிட்ட புதிய தகவல்கள்

தளபதி விஜய் பற்றிய மகிழ்ச்சியான நிகழ்வுகளை தற்போது பகிர்ந்து வருகிறார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் கூறியதாவது:

‘மார்க்கெட்ல எந்த கார் வந்தாலும், அதை வாங்கிவிட விஜய் அடம்பிடிப்பார். தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து இதை அவர் செய்து வருவதாகவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார்.

அதனால், சென்னை மார்க்கெட்டில் ஏதேனும் புதிய கார் வந்தாலும் விஜய்க்காக அதை நான் வாங்கிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

கருவிலிருந்தே நடிகர் விஜய் நடிப்பிற்காக தயாரானதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய மனைவி ஷோபா சந்திரசேகர், விஜய்யை கருவில் வைத்திருந்தபோதே தினந்தோறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் இதனால் விஜய் தினந்தோறும் இசையை கேட்டு வளர்ந்தார். இதனால், கருவில் இருந்தபோதே விஜய் சினிமாவிற்காக தயாரானதாகவும் எஸ்ஏசி பெருமை தெரிவித்துள்ளார்.

தற்போதும் விஜய் சினிமாவில் அடுத்தடுத்த பாடல்களை பாடி வருகிறார். கோட் படத்தில் 2 பாடல்களை யுவன் சங்கர் ராஜா இசையில் பாடியுள்ளார்.

கடந்த மாதத்தில் இவரது இறுதிப்படமான தளபதி 69 பூஜையுடன் துவங்கப்பட்டு முதல்கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கும் சென்னையில் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இதில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே காம்பினேஷன் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன.

அப்படியே, படத்தின் டைட்டிலையும், தளபதி பாடும் ஒரு பாட்டையும் வெளியிட்டால், பட்டைய கிளப்பலாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.