Pushpa 2

கங்குவா படம், அதிகாலை 4 மணி காட்சிக்கு வந்த பிரச்சினை; ரசிகர்கள் வருத்தம்

கங்குவா திரைப்படம் அதிகாலை காட்சி பார்க்க வாய்ப்பில்லையோ என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

வரலாற்றை மையமாக கொண்டு உருவான படம் கங்குவா. இப்படத்தில், மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் இரு வேறு பரிமாணங்களில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார்.

கிட்டத்தட்ட உலக அளவில் 11,500 திரையரங்குகளில், 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் அனைத்து விதமான திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம், உலக அளவில் 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

இன்னும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு மூன்று நாட்களே இருக்கும் நிலையில், பட குழுவினர் பெரிய அளவில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், ஏற்கனவே கங்குவா திரைப்பட திரையரங்க ஷேர்களில் சில பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தற்போது பெங்களூருவில் கங்குவா திரைப்படம் திரையிடுவதில் சில பிரச்சினைகள் இருப்பதாக இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூருவை பொறுத்தவரை நவம்பர் 14ஆம் தேதிக்கான அதிகாலை 4 மணி ஷோக்களுக்கு, தெலுங்கு மொழியில் மட்டுமே கங்குவா படம் இருக்கிறது, தமிழ் மொழியில் இல்லையே’ என வருத்தம் தெரிவிக்கின்றனர்.