ஹிட் கொடுத்த புஷ்பா 2 படத்தின் “பீலிங்ஸ்” பாடல்..ஆனால்? ராஷ்மிகா ஓபன் டாக்..!
புஷ்பா 2 படத்தின் பாடல் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ராஷ்மிகா.
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது என்று சொல்லலாம். இதுவரை இந்தியாவில் மட்டுமே 1029 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தின் ராஷ்மிகாவும் அல்லு அர்ஜுனும் இணைந்து ஆடிய ஃபீலிங்ஸ் பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம் இந்நிலையில் இந்த பாடல் குறித்து ராஷ்மிகா பேசியுள்ளார்.
அதாவது இந்த படத்தின் பீலிங்ஸ் பாடலை ஒத்திகை பார்க்கும்போது ஆச்சரியப்பட்டதாகவும் யாராவது தன்னை தூக்கினால் எனக்கு பயமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆரம்பத்தில் அல்லு அர்ஜுன் என்னை தூக்கி நடனமாடும் போது சங்கடமாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பிறகு அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமாரை நம்பிய பிறகு எந்த ஒரு சங்கடமும் தெரியவில்லை என்று சொல்லியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.