Pushpa 2

வெங்கட் பிரபு இயக்கப் போகும் புதிய படம்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

வெங்கட் பிரபு இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

venkat prabhu upcoming movie update

venkat prabhu upcoming movie update

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவரது இயக்கத்திலும் தளபதி விஜய் நடிப்பிலும் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

இந்நிலையில் இவரின் புதிய படம் குறித்து கேட்டபோது ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருந்த நிலையில் கோட் படத்தின் வாய்ப்பு வந்ததால் அந்தப் படத்தை இயக்கியிருந்தேன்.

ஆனால் தற்போது சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதால் விரைவில் இந்த படத்தின் ஹீரோ குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

இவரின் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறார் வைரலாகி வருகிறது

venkat prabhu upcoming movie update

venkat prabhu upcoming movie update