ஜெயிலர்2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் போட்ட பதிவு..!
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தப் படம் மக்கள் மத்தியில் வரவேற்பையும் வசூலிலும் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த செல்பி ஒன்றை வெளியிட்டு அதில் படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு என்றும் ஜெயிலர் 2 படப்பிடிப்பின் முதல் நாள் என பதிவிட்டு உள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
