ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பாடல்கள்: இசையமைப்பாளர் அப்டேட்ஸ்..

Web Ads

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த ராஜமவுலியின் இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி படம் குறித்து தெரிவிக்கையில், ‘ரசிகர்கள் பிரமாண்டத்தை எதிர்பார்க்கலாம். வாரணாசி திரைப்படத்தில் இசை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்தப் படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகின்றன. அனைத்துப் பாடல்களையும் நிறைவாக செய்ய இருக்கிறேன். இதில், எனக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை.

Web Ad 2

பொதுவாக, நீங்கள் செய்யும் பணியில் தெளிவும் உறுதியும் இருந்தால் உங்களுக்கு மன அழுத்தமே இருக்காது’ என நம்பிக்கையுடன் பேசியுள்ளார். முன்னதாக, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றது நினைவுகூரத்தக்கது.

rajamouli in varanasi movie song update
rajamouli in varanasi movie song update